headlines

img

மதச்சார்பின்மை, கூட்டாட்சி சுமையாகத் தெரிகிறதா?

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக கல்வித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. எனவே வரும் கல்வியாண்டில் பாடச்சுமை குறைக்கப்பட வேண்டுமென்று கல்வியாளர்கள் வலி யுறுத்தினர். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு சிபிஎஸ்இ தன்னுடைய திருகு தாள வேலையை ஆரம்பித்துள்ளது. புதிய கல்வி யாண்டில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு  வரை முப்பது சதவீதம் அளவுக்கு பாடச் சுமை குறைப்பது என சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இது குறித்து அறிவிக்க சிபிஎஸ்இ ஒரு சுற்ற றிக்கையை அனுப்பியது. 

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம் பெற்றிருந்த கூட்டாட்சி, குடியு ரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய பகுதி கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. 

மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வா கத்தின் வளர்ச்சி போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்டுள்ள பாடங்களை கூர்ந்து பார்த்தால் இந்த கோட்பாடுகள் அனைத் தும் மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எட்டிக் காயாய் கசப்பவை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பெரும்பகுதி மாணவர்களை கல்வி நிலையங்க ளுக்கு வெளியே நிறுத்தும் சதிச் செயலை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து முறையாக விவாதிக்காமலும், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமலும் இந்த புதியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது.

கொரோனா காலத்தை பயன்படுத்திக் கொண்டு மாநில அதிகாரங்களையும், உள்ளாட்சி அதிகாரங்களையும் பறித்து வரும் மோடி அரசு மாணவர்கள் இதுகுறித்து தெரிந்து கொள்ளக்கூடாது என கருதுகிறது. 

மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியல் சாசனத்திலிருந்தே அகற்ற முனைந்து தோற்றவர்கள் தற்போது பள்ளிப் பிள்ளைக ளின் பாடத்திட்டத்திலிருந்து இதை அகற்றி யுள்ளனர். அதேபோல கூட்டாட்சி, பன்முக தேசி யம், குடியுரிமை போன்ற பாடங்களை நீக்குவது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும்.

கடும் எதிர்ப்பு எழுந்ததால் இந்த கல்வி யாண்டுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சமாளிக்கின்றனர். ஆனால் தங்களுடைய மதவெறிக் கொள்கைகளை பாடப்புத்தகத்தில் புகுத்துவதே இவர்களது நோக்கம். நீக்கப்பட்ட இந்த பாடங்கள் அனைத்தும் மீண்டும் இந் தாண்டே இடம் பெற வேண்டும். நீக்க வேண்டிய பகுதிகள் எவை என்பதை நடுநிலையான கல்வி யாளர்கள் மூலம் முடிவு செய்ய வேண்டும்.  

;