headlines

img

போராட்ட அலை பரவட்டும்

தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை மிருக  பலத்தோடு துவங்கி, தொழிலாளர் விரோத சட்டங்கள் முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே சிதைத்தழித்து, அம்மாநில மக்களை திறந்த வெளி சிறைக் கைதிகளாக மாற்றிய முதல் கூட்டத்தொடர் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் நாடாளுமன்றத்தை சந்திக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) கூடுகிறது. இக்கூட்டத்தை ‘சுமூகமாக’ நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டு எதிர்க்கட்சிகளுடன் வழக்கமான ஆலோ சனையை நடத்தியிருக்கிறது அரசு. எதிர்க்கட்சி கள் ஏராளமான பிரச்சனைகளை இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் கொட்டியிருக்கின்றன. அவை அனைத்தும் முக்கியமானவை. குறிப்பாக, பொருளாதார வீழ்ச்சி இந்திய மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக தவித்துக் கொண்டிருக்கிற போது, ஏற்கெனவே வேலையில் இருக்கிற 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மிக முக்கிய பிரச்சனை, ஜம்மு - காஷ்மீர். வீதிகள் தோறும் - சந்துகள் கூட தப்பா மல் - எல்லா இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய படையினர் நிறுத்தப்பட்டு 100 நாட்களுக்கு மேலா கிறது. முற்றாக அடைப்பட்டு கிடக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். ஆகஸ்ட் 5 நாடாளுமன்றத்தில் காஷ்மீரிகளின் உரிமை பறிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்ட அந்த கணத்திலிருந்து, இப்போது வரை இணையதள வசதி துண்டிக்கப் பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பெயரளவிற்கு காலை 3 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டு அடைக்கப்படுகின்றன. எங்கும் சகஜ நிலை இல்லை. இனிமேல் சகஜ நிலையே கிடையாது என்று ஆட்சியாளர்கள் அச்சமூட்டு கிறார்கள். மறுபுறம், எதிர்பார்த்த படியே காஷ்மீரின் நிலங்கள் எல்லாம் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைமாற்றி விடு வதற்கான முயற்சிகள் சத்தமின்றி துவங்கி யிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பாசிச வெறிகொண்ட எதேச்சதி கார ஆட்சி பகிரங்கமாக வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நூறு நாள் சாட்சியமாக நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கப் போகிறது காஷ்மீர். இதன் துவக்கமாக, அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிற மூத்த தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை, குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன. பரூக் அப்துல்லா அனுமதிக்கப்படாவிட்டால் நாடாளுமன்றம் நிச்சயம் ஒரு போர்க்களமாக மாறும். ஆனால், எதையும் துச்சமென மதிக்கும் மோடி அரசு, இந்த போர்க்குரலை ஒடுக்க முற்படலாம். அது நாடு முழுவதும் கண்டன அலையை நிச்சயம் தோற்றுவிக்கும்.

;