headlines

img

குதிரை பேரத்திற்கு அரசே வழி வகுப்பதா?

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள் ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு காலம் கடத்தி வருகிறது. வார்டு மறு வரையறை என்று சாக்குப்போக்கு கூறி தேர்தலை நடத்தா மல் இருந்ததற்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் கடும் கண்டனம் தெரிவித்தன. உள்ளாட் சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை டிசம்பர் 13 க்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதி மன்றம் அண்மையில் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து வேறுவழியின்றி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம்  பணிகளை துவக்கியுள்ளது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் மற்றும்  12, 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதற்காக நிய மிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்கால மும் ஏற்கனவே முடிந்துவிட்டது. தேர்தல் நடை பெறாத காரணத்தால் உள்ளாட்சிகளில் ஏராள மான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் சட்டம் கூறினாலும் சட்டத்திருத்தம் செய்தோ அல்லது வேறு கார ணங்களைக் கூறியோ தேர்தலை ஒத்திவைப்பதில் சில மாநில அரசுகள் குறியாக உள்ளன.   மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோரை மக்களே நேரடியாக தேர்வு செய்துவந்தனர். 2011-ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்களின் நேரடி வாக்கு மூலமாகவே மேயர், நகராட்சி  மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழ் நிலையில் இந்த தேர்தலில் வெற்றிபெற முடி யாது என்று கருதிய அதிமுக அரசு இந்த பதவிக ளுக்கான தேர்தலை மறைமுகமாக கவுன்சிலர்க ளைக் கொண்டு தேர்வு செய்ய அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது. இது மக்களின் உரிமையை பறிப்பதாகும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மறைமுகத் தேர்தல் குறித்து ஆலோசிக்கவே இல்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி யிருந்தார். ஆனால் மறுநாளே மறைமுகத்தேர்த லுக்கான அவசரச்சட்டத்தை அரசு  கொண்டு வரு கிறது.  அதிமுக அரசின் சொல்லும் செயலும் ஒன்றுக் கொண்டு முரண்பாடாக இருக்கிறது.  

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி,  பேரூராட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்வதுதான் சரியானது. மாநகராட்சி, நக ராட்சி கவுன்சிலர்கள் மூலமாக  தேர்வு செய்யப் படும்போது குதிரை பேரம் தான் நடைபெறும். இது பல்வேறு முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்.எனவே தமிழக அரசு அவசரச்சட்டத்தை ரத்து செய்து மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகை யில் மேற்கண்ட பதவியிடங்களுக்கு நேரடித் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். அதிமுக ஆட்சியில் 2011ல் தேர்தல் நடத்தப்பட்டபோது நேரடி தேர்தல் முறைதான் கடைபிடிக்கப்பட்டது. அதை தற்போது மாற்றவேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக அரசுதான் விளக்கவேண்டும்.

;