headlines

img

எத்தனை காலம்தான் ஏமாற்றுவாரோ?

 உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் என்பதற்கு இரண்டு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு அரசின் சார்பில் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. விளக்கம் அளிப்பதற்கு இன்னும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என்று வேண்டுமானால் கேட்பார்களே தவிர தேர்தலை நடத்தாததற்கு எந்தவிதமான நியாயமான காரணத்தையும் மாநில அரசினால் கூற முடியாது.  ஏனென்றால் கோடை விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றம் திங்களன்று மீண்டும் துவங்கிய நிலையில், இது தொடர்பான வழக்கு புதனன்று விசாரணைக்கு வரும் நிலையில் விசாரணையை மேலும் ஒரு வாரம் ஒத்தி வைக்க வேண்டும்  என்றுதான் மாநில அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்காமல்தான் தலைமை நீதிபதி அமர்வு இரண்டு வார காலத் திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது.  உயர்நீதிமன்றமும் பலமுறை உத்தரவிட்டும் மாநில அரசு தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தே வந்தது. தற்போது உச்சநீதிமன்றத்திலும் அதே வேலையைத்தான் கொஞ்சம் கூட கூச்சமில்லா மல் செய்து வருகிறார்கள்.  வார்டு மறு சீரமைப்பு முடிவடையவில்லை, வார்டு வாரியான வாக்காளர் கணக்கெடுப்பு முடியவில்லை, நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கே வந்துவிட்டது என்றெல்லாம் மாநில அரசு மனுத் தாக்கல் செய்தது. தற்போது தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோருவது வழக்க மான இழுத்தடிக்கும் உத்தியே அன்றி வேறல்ல.  இந்த வழக்கு வரும் 17ஆம் தேதி விசார ணைக்கு வரும் நிலையில் தேர்தல் நடத்தும் தேதியை தெரிவிக்க வேண்டுமென உச்சநீதி மன்றம் கறாரான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நீதிமன்ற வழக்கை மாநில அரசு ஒரு சாக்காக கொள்வதை உச்சநீதிமன்றம் இனியும் அனுமதிக்கக்கூடாது. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்து வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி நடத்த மறுப்பது சட்ட விரோதமாகும். வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறு நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மக்களுக்கு பல்வேறு வகையான இடர்பாடுகள் ஏற்படுகின்றன. தற்போது வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தில் தமிழகம் சிக்கியுள்ள நிலை யில், உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பிலிருந்தால் பெரும் உதவியாக இருக்கும். மறுபுறத்தில் அதி காரிகள் தங்கள் இஷ்டம் போல் வரிகளை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கிறார்கள். அடிப்படை பணிகள் முடங்கியிருக்கும் நிலையில் உடனடி யாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுவது அவசியமாகும்.

;