headlines

img

எங்கெங்கு காணினும் அநீதியடா!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கும், உயர் படிப்புக்கும் வேட்டு வைப்பதில் மத்திய, மாநில அரசுகளிடையே பெரும் போட்டி நிலவுகிறது. 

தமிழகத்தில் சிவில் நீதிபதி பணியிடங்க ளுக்கான முதல் கட்டத் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஞாயிறன்று நடத்த வுள்ளது. 176 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வில் தமிழ் தெரியாத, பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் அதன்பிறகு தமிழை கற்றுக் கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்று வரும் நிலையில், கீழமை நீதிமன்றங்களில் கூட தமிழ் வழக்காடு மொழியாக இருக்குமா என்ற கேள்வியை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது. சட்டம் பயின்ற, நீதிபதி பதவிக்கு தகுதியான பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தில் இருக்கும் போது பிறமொழியினரும்  இந்தத் தேர்வை எழுதலாம் என்று சலுகை வழங்கப்படு வது ஏன்? இதேபோன்று வேறு எந்த மாநிலத்திலும் இருக்குமா என்பது சந்தேகமே. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்க ளில் பிற மாநிலத்தவர் அதிகமாக பணியமர்த்தப் படும் நிலையில் தமிழக அரசு பணியிடங்களும் பிற மொழியினருக்கு தாரை வார்க்கப்படுவது முற்றிலும் அநீதியானதாகும். இதை எதிர்த்து போராடுகிற வழக்குரைஞர்களின் போராட்டம் நியாயமானது. இது பணிவாய்ப்பு தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல.  நீதிமன்றங்கள் அவரவர் தாய்மொழியில் இயங்க வேண்டும் என்ற நியாய மான கோரிக்கைக்கும் எதிரானதாகும்.

மறுபுறத்தில் மருத்துவ உயர் கல்வியில் இதர, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மோடி அரசு மறுத்து வஞ்சிக்கிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்ட மாக்கப்பட்ட முற்படுத்தப்பட்டோரில் ஏழைக ளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதை உடனடியாக நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் மண்டல் குழு பரிந்துரையின் அடிப்ப டையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முற்றாக மறுக்கப்படுகிறது. 

இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால் கிராமப்புற, தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்பு அப்பட்டமாக பறிக்கப்படுகிறது. மறு புறத்தில் சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு வழங்க வேண்டிய ஒதுக்கீட்டை மறுப்பதால் கடந்தாண்டு 3400 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த அநீதியை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் குரலெடுத்துப் பேசி சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு நியாய எண்ணம் கொண்ட அனைவருக்கும் உண்டு.

;