headlines

img

திசை திருப்பும் அரசியல்

 மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திசை திருப்பும் வேலையில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இறங்கி யுள்ளது. புதிய மக்களவை பொறுப்பேற்றவுடன் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியர சுத்தலைவர் உரையாற்றுவது வழக்கம். ஆட்சி யில் இருக்கும் அரசு அந்த உரையை எழுதித் தரும். இந்தாண்டும் அதுதான் நடைபெற்றது. ஆனால் அரசின் கொள்கைகளை பேசாமல் எதிர்க்கட்சிகளை-  குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்கள்  அதில் அதிக மாக இருந்தது. 

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, குடியர சுத்துணைத்தலைவர் ஜகதீப் தன்கரைத் தொடர்ந்து குடியரசுத்தலைவரும்  தனது உரை யில் காங்கிரஸ் ஆட்சியில் அவசர நிலை பிரகட னம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் அறிவிக்கப் படாத அவசர நிலை அமலில் இருந்தது. தற்போ தும் அப்படியே உள்ளது. எனவேதான் மக்களவை யில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசை கூர்மை யாக விமர்சிக்கும் போது இதுவரை இல்லாத விதத்தில் ஒலிபெருக்கி துண்டிக்கப்படுகிறது. 

மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அவர்களில் பலர் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக் கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். இதனால் உடல் நலிவடைந்து பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி சிறையிலேயே உயிரிழந்தார்.பாஜகவுக்கு சவா லாக விளங்கும் முதலமைச்சர்கள் மிரட்டப்பட்ட னர். ஜார்க்கண்ட், தில்லி முதலமைச்சர்கள் சிறை யில் அடைக்கப்பட்டனர். இப்படி ஜனநாயகத்தி ற்கு விரோதமான பாஜகவின் செயல்பாடுகளை பட்டியல் போட்டால் ஏடு தாங்காது! அக்கட்சியின் மோசமான செயல்பாடுகள் காரணமாகவே பாஜகவுக்கு மக்கள் தனிப்பெரும்பான்மையை வழங்கவில்லை. 

காங்கிரஸ் அரசு அமல்படுத்திய அவசர நிலைக்கு மக்கள் எப்போதோ அக்கட்சிக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள். அவசர நிலைக்குப் பின்னர் பல தேர்தல்கள் நடை பெற்று விட்டன. அதில் காங்கிரஸ் பலமுறை மக்க ளின் தீர்ப்பைப் பெற்றுவிட்டது.  

குடியரசுத்தலைவரின் உரை சமீபத்திய நீட்தேர்வு வினாத்தாள் கசிவு, விலைவாசி உயர்வு, மணிப்பூரில் தொடரும் வன்முறை, பயணிகள் ரயில் விபத்துக்கள், அதிகரித்து வரும் சாதிய அட்டூழியங்கள், பயங்கரவாத சம்பவங்கள் ஆகியவற்றை திட்டமிட்டு மறைத்து விட்டது. உண்மையான இந்த பிரச்சனைகளில் இருந்து  மக்களை திசைதிருப்பவே ‘அவசர நிலை’ என்ற பழைய துருப்புச்சீட்டை பாஜக கையில் எடுத்துள் ளதே தவிர, ஜனநாயகத்தின் மீதான அக்கறை யால் அல்ல. இதை  நாட்டுமக்களும் நன்கு அறிந் துள்ளதால் பாஜகவின் இத்தகைய மலிவான அரசியல் இனியும் எடுபடாது.

;