headlines

img

பற்றா? வெற்றா?

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு நாடு முழுவதும் குறிப்பாக இந்தி மொழி பேசாத மாநிலங்களில் அந்த மொழி யைத் திணிப்பதற்கு நிர்ப்பந்தித்து வருகிறது. அதற்காக மூன்றாவது மொழியை மாணவர்கள் கற்க வேண்டும் என்று இந்தி மொழியைத் திணிப்ப தற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

அதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் தமிழகம், கர்நாடகம், மேற்கு வங்காளம், பஞ்சாப் போன் றவை கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. அம்மாநில மக்களும் பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆயி னும் ஆர்எஸ்எஸ்-சின் ஒரு தேசம், ஒரு மொழி, ஒருமதக் கோட்பாட்டைத் திணிப்பதற்கே தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதனால் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பை யும் அது பயன்படுத்துகிறது. சில நேரங்களில் விதி களுக்கு மாறாக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறது. அதற்கு மாநில ஆளுநர்களைக் கொண்டு துணைவேந்தர்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்குகிறது. இதற்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்புக் கிளம்புவதால் தற்போது தன்னுடைய நடைமுறையை கொஞ்சம் மாற்றி யிருக்கிறது.

மோதல் போக்கை கடைப்பிடித்தால் எதிர்ப்பு வரும் என்பதால் தாஜா போக்கை துவக்கியிருக்கி றது என்பதையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யின் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பேச்சு உணர்த்துகிறது. அதனால் தமிழ் மொழி மீது  மாளாக் காதல் கொண்டு மாறாப் பற்றுக் கொண்டி ருப்பவர் போல பேசியிருக்கிறார். அதற்கு அவரது எஜமானரான பிரதமர் மோடியையும் துணைக்கு அழைத்திருக்கிறார்.

தமிழ்மொழியை உலகம் முழுவதும் பரப்ப  வேண்டும் என்கிறார். தமிழ் பேசாத பிற மாநிலங்க ளில் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுக் கொடுக் கப்பட வேண்டும் என்கிறார். அப்போதே அவர்க ளது மூன்றாவது மொழி (இந்தி) பாசம் வெளிப் பட்டு விடுகிறதல்லவா? தமிழின் தொன்மை பற்றி நம்மிடமே பேசுகிறார்.தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களில் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்கிறார். ஏன் அதை ஒன்றிய அரசே செய்யக்கூடாது?

செம்மொழியான தமிழை வளர்க்க ஒன்றிய பாஜக அரசு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது? அதே நேரத்தில் சமஸ்கிருதத்துக் கும் இந்திக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கி றது? வெறுமனே புகழ்ந்து பேசுவதால் தமிழ் மக்கள் மயங்கி விடுவார்கள் என்று நினைக்கிறார் போலும் ஆளுநர்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி யாக யார் குறுக்கே நிற்கிறார்கள். ஒன்றிய அரசு நினைக்க வேண்டுமே அதைச் செய்வதற்கு? ஆனால் இவர்களின் உண்மைப் பாசமும் பற்றும் இந்தி வழி சமஸ்கிருதம் மீதல்லவா? அண்மை யில் தான் அண்ணாமலை தனது தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருந்தார். அவரது குரல்தான் இப்போது ஆளுநரின் இரவல் குரலாக ஒலிக் கிறது. தமிழகம் ஏற்கெனவே தருண் விஜய் போன்ற வர்களை பார்த்துவிட்டது என்பதை ஆளுநர் நினைவில் கொள்ளட்டும்!

;