headlines

img

மேலும் ஒரு மோசடி

2047ஆம் ஆண்டுக்குள் முழுமையான சுயசார்பு (ஆத்ம நிர்பார்) என்ற இலக்கை எட்டு வதற்காக முழு வளர்ச்சிபெற்ற பாரதம் (விக்சித் பாரத்) என்ற முழக்கத்துடன் திடீரென்று தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. 

முழுக்க முழுக்க நரேந்திர மோடியை மையப்படுத்தி, ‘மோடியின் கேரண்டி’ என்ற வாசகத்தைப் பிரதானப்படுத்தி இந்தத் தேர்தல்  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் உலகிலேயே ‘அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒருங்கி ணைந்த வளர்ச்சி மாடலாக’ மோடியின் மாடல்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பெருமை அடிக்கப்பட்டுள்ளது. 

வறுமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கை களில் ஒன்றாக 80 கோடிக்கும் அதிகமான மக்கள் 2020 முதல் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேசன்  பொருட்களை பெற்று வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஏற்கெனவே அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் உள்பட பல திட்டங்களின் மூலமாக வழங்கப்பட்டு வந்த இலவச ரேசன் மற்றும் மானிய விலையிலான ரேசன் உணவு தானியங்களை முற்றாக நிறுத்தி விட்டுத்தான் மேற்கண்ட திட்டத்தை அறிவித்தார். 

தற்போது இலவச அரிசி 5 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.

இதுவரை ரேசனில் வெறும் 15ரூபாய்க்கு 5 கிலோ அரிசி வாங்கிக் கொண்டிருந்த மக்கள் 2020 முதல் வெளிச்சந்தையில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை செல வழித்து அந்த அரிசியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு மீது நடத்தப்பட்டுள்ள பயங்கர தாக்குதல் ஆகும். பாஜக தேர்தல் அறிக்கையில் முதல் அம்சமாக இடம் பெற்றுள்ள இந்தப் பிரச்சனையே போதும், ஒட்டு மொத்த அறிக்கையும் ஒரு மோசடி என்பதை நிரூபிக்க!

இதேபோன்று, வறுமை ஒழிப்பு, பெண்கள் சக்தி, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு உதவி மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மேம் பாடு, மிக பிரம்மாண்டமான அளவில் உள்கட்ட மைப்பு மேம்பாடு -என  ஏராளமாக சாதித்துவிட்ட தாக பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. அதன் அடிப்படையில், அனைத்தும் தொடரும் என்று பழைய வாக்குறுதிகளை மீண்டும் அறிவித்துள்ளது. 

வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை இது. ஏற்கெனவே கடந்த பத்தாண்டுகளில் என்ன கூறி வந்தார்களோ, என்ன திட்டங்களை அமல் படுத்துவதாக சொன்னார்களோ, எதை அவர்கள் இதுவரை செய்யாமல் கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாக மடைமாற்றிவிட்டார்களோ அதே அம்சங்களை மீண்டும் வார்த்தைகளை மாற்றி, அனைத்திலும் ‘உயர் தரம்’ என்ற சொல்லாடலைச் சேர்த்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

மோசடியே பாஜக, பாஜகவே மோசடி என்பதை இது மேலும் நிரூபிக்கிறது.

;