headlines

img

பூசாரிகளுக்கு அதிகாரமா?

குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகளில் அதிர்ச்சிகரமான பல விவரங்கள் இடம்பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள் ளது. குறிப்பாக, இந்திய குடியுரிமை கோரி  விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பூசாரியிடம் வெள்ளைத் தாளில், இவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் தான் என்று கையெழுத்து பெற்று பதிவேற்றம் செய்தாலே போதும் என்றும் அதுவே அதிகாரப் பூர்வமான சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூறி யிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த விபரம், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆன் லைன் உதவி மையத்தின் மூலமாக கிடைக்கப்  பெற்ற பதில் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றி லும் விரோதமானது மோடி அரசு நிறைவேற்றி யுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019. இடது சாரிகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே; ஒட்டுமொத்த நாட்டிலும் முஸ்லிம் சிறு பான்மை மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதர வாக அரசியல் இயக்கங்கள் வலுவான போராட்டங்கள் நடத்திய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போதைய தேர்தலின் பின்னணியில் கடந்த மார்ச் 11 அன்று உடனடியாக  அம லுக்கு வருவதாக ஒன்றிய உள்துறை அமைச்ச கம் அறிவிக்கை வெளியிட்டது. அதைத் தொட ர்ந்து, வெளிநாடுகளிலிருந்து பல்வேறு கார ணங்களால் இந்தியாவிற்குள் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் குடியுரிமை பெறு வதற்கு மார்ச் 21 முதல் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டது. இந்தப் பதிவேற்றத்திற்கு, இதர பல ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட நபர், குடி யுரிமை பெறுவதற்கு தகுதியானவர்தான் என்ற  சான்றிதழ் முக்கியமாகும். ‘உள்ளூர் பகுதியில் உள்ள சமூக நிறுவனம்’ இந்தச் சான்றிதழை வழங்கலாம் என விதியில் கூறப்பட்டுள்ளது. அது பற்றி விளக்கம் கேட்கும்போதுதான், எந்தவொரு உள்ளூர் பூசாரியும் வெள்ளைத் தாளில் அல்லது 10 ரூபாய் மதிப்புள்ள நீதித்துறை ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திட்டு கொடுத்தாலே போதும் என விளக்கம் பெறப் பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. 

இந்து அல்லாத எவருக்கும் இந்து கோவில் பூசாரியே சான்றளிப்பார் என்பதும் அரசு கட்டமைப்புகள் பல இருந்தாலும் கோவிலையும் அதன் பூசாரிகளையும் அதிகாரம் கொண்டவர்களாக மாற்றுவதும் முற்றிலும் அரசியல் சட்டவிரோதமாகும். 

மிகவும் விழிப்புடன் இச்சட்டத்தை முற்றாக ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை இத்தேர்தல் மூலம் உருவாக்குவது அவசர அவசியமாகும்.

;