மணிப்பூர் மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்க ளுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறைகளை தடுக்க பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு கள் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது ஒருபுறமிருக்க, வெறுப்பு நெருப்பை அணைய விடாமல் பார்த்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றன.
மணிப்பூரில் நடைபெற்ற வன்செயல்களில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆசிட் வீச்சு உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் பெண்க ளுக்கு எதிராக நடந்துள்ளன. இவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவே மாநில பாஜக அரசுக்கு நான்கு மாதங்கள் ஆகியுள்ளது.
இந்துத்துவா அமைப்புகளால் வழி நடத்தப் படும் பெரும்பான்மை மெய்டெய் அமைப்புகள் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களையும், சீருடைகளையும் கைப்பற்றி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.
இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் செப் டம்பர் 16 அன்று ராணுவ உடையணிந்து, ஆயு தங்களுடன் இருந்த மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ள னர். சட்ட விரோதமாக ராணுவச் சீருடை அணிந்திருந்த அவர்கள் காவல்துறை ஆயு தங்களையும் திருடி வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கைது செய்யப்பட்ட ஐவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மெய்டெய் இன பெண்கள் கூட்டமைப்பு 48 மணிநேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த பந்த் போராட்டத்தின் போது, பல்வேறு இடங்களில் மீண்டும் வன்செயல்கள் நடந்துள்ளன. இந்த பந்த் போராட்டத்தை தடை செய்யவோ, தடுக்கவோ மாநில பாஜக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சிறுபான்மை குக்கி பழங்குடி இனத்தவர்கள் தான் அதிகமான அளவு படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அவர்களது வீடுகள், சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. நிர்க்கதியாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் குக்கி பழங்குடியினர் அதிகமாக உள்ளனர். ஆனால் குக்கி இனத்தவரின் தாக்குதலிலிருந்து பாதுகாப்புப் படையினர் தங்களை பாதுகாக்க வில்லை என்றும் அதனால்தான் ராணுவச் சீருடை அணிந்து தங்கள் சமூக இளைஞர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும் மெய்டெய் அமைப்புகள் கூறுகின்றன.
பெரும்பான்மையினரான மெய்டெய் சமூகத்தவருக்கு பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதாக பாஜக அறிவித்தது தான் பிரச்சனையின் துவக்கப் புள்ளியாகும். அத னால் ஏற்பட்ட கலவர நெருப்பில் தொடர்ந்து குளிர் காய்கிறது பாஜக. இந்த நெருப்பு இன்னும் எத்தனை பேரை பழிவாங்குமோ?