headlines

img

புதுவை மின் ஊழியர் போராட்டம் நியாயமானது

புதுவை மாநிலத்தில் மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் யூனியன் பிரதேச அரசின் முடிவை கண்டித்து மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாய மான இந்த போராட்டத்தை எதிர்கொள்ள முடி யாத மாநில அரசு இரவோடு இரவாக துணை ராணுவ படை உதவியுடன் மின் ஊழியர்களை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. 

மாநிலம் முழுவதும் மின்வெட்டில் சிக்கி யுள்ள நிலையில், புதுவை அமைச்சர்கள் சிலர் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் சீருடையுடன் கலந்து கொள்கின்றனர். அந்த மாநிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மதவெறி மயமாக்க முயல்கின்றனர்.

புதுவை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராசன் எஸ்மா சட்டம் பாயும் என மிரட்டுகிறார். புதுவை மின் ஊழியர்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது. மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படுவதால் மின் ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணம் கடு மையாக உயரும். இலவச மின்சாரத் திட்டங்கள் பறிபோகும். இதனால்தான் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு போராடும் ஊழியர்கள் மீது பழிசுமத்துகிறது புதுவை அரசு. மின்தடைக்கு தாங்கள் காரண மில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறி யுள்ளனர்.

தனியார்மயத்தை கைவிட மாட்டோம் என்று கூற புதுவை அரசு தயாராகயில்லை. மாறாக, மின்துறை செயலாளர் டி.அருண் மின்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவே மின் விநியோ கத்தை தனியாருக்குத் தர முடிவு செய்துள்ளதாக கூறுகிறார். இது முற்றிலும் தவறான ஒன்று. 

மின்துறையை முற்றிலும் தனியாருக்கு தர ஒன்றிய பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே புதுவை யில் மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படு கிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார மசோதா நடைமுறைக்கு வருமானால், இந்தியா முழுவதும் மின்சாரத்துறையின் தனியார் முதலாளிகள் கைகளுக்குச் சென்று விடும். அதன்பின் ஏழை, எளிய மக்களுக்கு மின் சாரமோ எட்டாக்கனியாகிவிடும்.

புதுவையில் போராடி வரும் மின்சாரத் துறை ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது அனைத்துப்பகுதி தொழிலாளர்க ளுடைய கடமை மட்டுமல்ல, புதுவை மக்க ளின் கடமையுமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசை முற்றிலும் புறக்கணித்து நேரடி ராஜ்ஜியம் நடத்தும் துணை நிலை ஆளுநர், போராடும் தொழிலாளர்களை மிரட்டு வதை அனுமதிக்க முடியாது. புதுவையில் பாஜக கூட்டணி அரசு ஒன்றிய அரசின் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, அடக்குமுறையையும் அப்படியே பின்பற்றுகிறது.

;