headlines

img

ஜனநாயகத்தை கசாப்பு செய்த ‘சூப்பர் சக்தி’

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா வில் பிளவை ஏற்படுத்தியது ஒரு சூப்பர்சக்தி  என்று அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். அந்த சூப்பர்சக்தி அனைத்து வகையிலும் (பணம், பதவி, அடியாட் கள்)  தங்களுக்கு உதவுவதாகவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.  ஜனநாயக படுகொலையை பாஜக தான் செய்தது என்பதை அவர் வெளிப்படையா கவே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார். இவர்தான் இப்படி என்றால் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திர காந்த் பாட்டீல் ‘ஆளும் கூட்டணி அரசு விரைவில் கவிழும்’ என்று கடந்த ஒரு வாரமாகக்கூறி வந்தார். 

 மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ‘ஆபரேஷன் தாமரை’ துவங்கிவிட்டது என்றார். அப்படி என்றால் இவை அனைத்தும் பாஜகவின் திட்டமிட்ட சதி என்பது உறுதியாகிவிட்டது. சிவசேனையில் அதிருப்தி இருந்தது உண்மைதான் என்றாலும் அதை  அக்கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் கூட்டணி ஆட்சியை எப்படியாவது கவிழ்க்கவேண்டும் என்று காத்திருந்த பாஜக, சிவசேனையின் வீட்டில் எரிந்த நெருப்பில்  எண்ணெய்யை ஊற்றியது. அது இன்று கூட்டணி ஆட்சியை காலி செய்து கொண்டிருக்கிறது. 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அறு திப் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் பாஜகவுடன் கூட்டணி அரசமைக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாஜக நள்ளிரவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அதன் முக்கிய தலைவர் அஜித் பவாருடன்  இணைந்து அவசர அவசரமாக அரசமைத்தது. முதல்வராகத் தேவேந்திர பட்னவீஸ் துணை முதல்வராக அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். ஆனால் அந்த அரசு சுமார் அறுபது மணி நேரங்களிலேயே கவிழ்ந்தது. இதனால் சூடுபட்ட பூனையாக மாறிய பாஜக மகா விகாஸ் அகாடி ஆட்சியைக் கவிழ்க்கத் தொடர்ந்து தீவிரமாக முயன்று வந்தது. 

அமலாக்கத்துறையை வைத்து தேசியவாத காங்கிரஸ்- சிவசேனா அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது, பொய் வழக்குப் போட்டது. அது வும் போதாது என்று வருமான வரித்துறையை வைத்து பல்வேறு வழிகளில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. 

மோ`ஹித் கம்போஜ் மும்பையில் பாஜக-வில் நன்கு அறியப்பட்ட முகம். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவர் ஒரு பணக்கார நகை வியாபாரி. சூரத் விமான நிலையத்தில் சிவசேனை எம்.எல்.ஏ.க் களை அவர் தான் விமானத்தில் ஏற்றினார். இது சிவ சேனாவின் உள்விவகாரம் என்றால்,  அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கம்போஜ் உதவிசெய்தது ஏன்? எதற்காக அங்கு அவர் வந்தார்? ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் விமானத்தை  முன்பதிவு செய்தது யார்?  தேவேந்திரபட்னவீசின் நம்பிக்கைக் குரிய பாஜக இளைஞர் அணித்தலைவரான சஞ்சய் குட்டே சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சூரத் சென்றது ஏன்? அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குவஹாத்தி யை அடைந்தபோது, குட்டேவும் உடனிருந்தது ஏன்? என்ற கேள்விகளுக்கு பிரதமரிடமும் பாஜக தலை வர்களிடம் பதில் இருக்கிறதா? பாஜக ஜனநாய கத்தை இழிவு செய்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

 

;