headlines

img

பிரதமரின் பெருமிதமும், தேசத்தின் நிலையும்

இந்தியாவில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் இங்கு முதலீடு செய்ய வேண்டுமென்று உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் இந்தியா உரிமம்ராஜ் என்று அறியப்பட்டதாகவும், ஆனால் தற்போது வரிக் குறைப்பு உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்க ளுக்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் நவதாராளமாக்கல் என்ற பெயரில் அனைத்துத்துறைகளையும் அந்நியரு க்கு திறந்துவிடுவதைத்தான் பிரதமர் பொருளா தார சீர்திருத்தம் என்று புனுகுபூசிய வார்த்தை களால் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய அரசின் நடவடிக்கைகளை சர்வ தேச பொருளாதார நிபுணர்கள் பாராட்டுவதாக பிரதமர் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார். பொருளாதார சீர்திருத்தத்தின் மறுபக்கத்தை ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தி யாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சில பணக்காரர்களின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

வரிவிதிப்பை குறைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் ஜிஎஸ்டி என்ற பெயரில் சொந்த நாட்டின் மக்களின் வாழ்வாதாரம் சூறை யாடப்படுகிறது. மறுபுறத்தில் கார்ப்பரேட் முத லாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் முதலீட்டை ஈர்ப்பதாகக்கூறி தொடர்ந்து வரிவிதிப்பு ரத்து செய்யப்படுகிறது. 

இந்தியாவின் முதல் 98 கோடீஸ்வரர்களுக்கு ஒரு சதவீதம் வரிவிதித்தால் கூட ஒன்றிய கல்வித் துறைக்கான ஓராண்டு செலவை சமாளிக்க முடியும் என்றும், 4 சதவீதம் வரிவிதித்தால் மதிய உணவு திட்டத்துக்கு தேவையான நிதியை அடுத்த 17 ஆண்டுகளுக்கு வழங்க முடியும் என்றும் ஆக்ஸ்பாம் இந்தியா கூறியுள்ளது. இந்திய பணக் காரர்கள் 10 பேரின் சொத்தை வைத்து 25 ஆண்டுக ளுக்கு அனைவருக்கும் இலவசக் கல்வி தர முடியும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தேசிய பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் சூறைபோடும் ஒன்றிய அரசு, இந்த தேச விரோத நடவடிக்கையை தன்னுடைய சாதனையாக உலக அரங்கில் கூறி இன்னமும் கூட நாட்டின் சுய சார்பை அழிக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறது.

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இந்தியா மிக கவனமாகச் செயல்பட்டது என்றும், உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரத மர் கூறியுள்ளார். புலம் பெயர் தொழிலாளர்களை நிர்க்கதியாக விட்டது ஒன்றிய அரசு. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிவை நோக்கி தள்ளப்பட்டன. இதையெல்லாம் மறைத்து ஒரு சில பணக்காரர்களின் வளர்ச்சியை மட்டுமே ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சியாகப் படம் காட்டிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.  

;