headlines

img

இளைய இந்தியாவின் கனவுகள் நொறுங்குகின்றன

தெலுங்கானாவில் வளர்ச்சி இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்றும் இந்த மாநிலத் தை தொழில்நுட்ப மாநிலமாக மாற்றுவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஹைரதாபாத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இனி தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் கூறியுள்ளார். 

பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறியது. ஆனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்காதது மட்டுமின்றி நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பின் பற்றியதால் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூடி ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளை யும் பறித்ததுதான் மிச்சம். அதுமட்டுமின்றி பொ துத்துறை நிறுவனங்களை தொடர்ந்து தனி யார்மயமாக்கி வருவதால் அந்நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்பும் பறிபோய்க் கொண்டிருக்கிறது.

இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உரு வாக்கித் தருவதற்கு பதிலாக தன்னுடைய மத வெறி நிகழ்ச்சி நிரலுக்கு அவர்களை பயன்படுத்தி நாடு முழுவதும் கலவர விதைகளைத் தூவி வரும் கட்சியின் பிரதமர் இளைஞர்கள் குறித்து பேசுவது கேலிக்கூத்து.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தன்னுடைய ஆட்டத்தை எவ்வாறு நடத்தி வருகிறது என்ப தற்கு உ.பி., துவங்கி கர்நாடக மாநிலம் வரை உதாரணங்கள் ஏராளம். 

உ.பி.,யில் சட்டமன்றத் தேர்தலையொட்டி மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டன. பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் துவங்கி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக விஷம் கக்கினர்.

உடையின் பெயராலும், உணவின் பெயரா லும் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் தாக்குத லுக்கு உள்ளாக்கப்படுவதுதான் பாஜகவின் பாணி. கர்நாடகத்திலும் இதைத்தான் பாஜக செய்து வருகிறது. ஹிஜாப் பிரச்சனையை கிளப்பிவிட்டு இஸ்லாமிய மாணவிகளின் கல்விக்கு வேட்டு வைக்க முயன்றனர்.

பல மாநிலங்களில் பசுவின் பெயரால் கலவ ரத்தை நடத்தி வருகிறது ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரம். பசுவைப் பற்றி படுகிற கவலையில் கோடியில் ஒரு பங்கு கூட இளைஞர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இளை ஞர்களின் கல்விக் கனவில் மண் அள்ளிப் போட முயல்கின்றனர். தகுதி, தரம் என்கிற பெயரில் தேசத்தின் பெரும் பகுதி இளைஞர்களை அறிவற்றவர்களாக சித்தரிக்க முயலும் இவர்கள் இளைஞர்களைப் பற்றி கவலைப்படுவதாக கூறுவது வெறும் ஏமாற்று வேலை. பிரதமர் மோடியைப் பொறுத்த வரை சொல்வது வேறு, செய்வது வேறு. இதைத்தான் அவருடைய ஹைதராபாத் பேச்சும் உணர்த்துகிறது.

;