headlines

img

இது தீர்வல்ல!

மதவெறியின் கோரத்தாண்டவம் மீண்டும் ராஜஸ்தானின் உதய்பூரில் பட்டப்பகலில் கன்னை யாலால் என்பவரின் படுகொலை மூலம் அரங் கேறியிருக்கிறது. பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையச்செய்யும் கொலை வெறி. மத அடிப்படை வாதங்களால்  ஊட்டி வளர்க்கப்பட்ட வெறுப்பு ணர்வின் வெளிப்பாடே இந்த காட்டு மிராண்டித் தனம். இது வன்மையான கண்டனத்திற்குரியது. 

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய நூபுர்சர்மா வின் வெறுப்பு பேச்சை ஆர்எஸ்எஸ், சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரித்து வந்தன. பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் நூபுர் சர்மா பேச்சை ஆதரித்ததுடன், பன்மடங்கு வெறுப்பை விதைக்கும் வகையில் தொடர் பிரச்சாரமும் நடைபெற்றது. அப்படி நடைபெற்ற பிரச்சா ரத்தில் நூபுர்சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்ட வர்களில் கன்னையா லாலும் ஒருவர்.  

கன்னையா லாலுக்கு மிரட்டல் வந்திருந்த நிலையில், காவல்துறையில் புகார் செய்தி ருந்த போதிலும் போதிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மதவெறியை அவ்வளவு எளிதாக காவல்துறை எடுத்துக் கொண்டதன் விளைவு, கன்னையா லால் படுகொலை பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது. அந்த படுகொலை யின் போது குற்றவாளிகள் எடுத்த கொடூர  காணொலியை வெளியிடக்கூடாது என காவல் துறை அறிவித்தது. ஆனாலும்  சமூக ஊடகங்க ளிலும்,  சில கார்ப்பரேட் ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப் பட்டு எரியும் நெருப்பிற்கு எண்ணெய் வார்க்கப்பட்டது. கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, வன்முறை தீயை விசிறி விட்டது மிக ஆபத்தான போக்காகும். 

கன்னையா லால் படுகொலை மட்டுமல்ல,  அலிமுதீன் அன்சாரி கும்பல் படுகொலை உள்ளிட்ட மதரீதியான படுகொலைகளுக்கு காரணம் மதவாதமே, மதவெறிக்கு மதமில்லை. பெரும் பான்மை மதவெறியும், அதனால் ஊட்டி வளர்க்கப்படும் சிறுபான்மை மதவெறியும் - இரண்டும்   இந்த மண்ணிலிருந்து வேரறுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த தேசத்தின் மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க முடியும். இந்தியாவில் தேசியவாதம் என்ற பெயரில் பன்முகத்தன்மை  சிதைக்கப்படுகிறது. உணவு, உடை, மொழி, கலாச்சாரத்தின் பேரில் பிரிவினை தூண்டப்படுகிறது. இதன் விளைவு ஒற்றுமைக்குப் பதிலாக நாட்டில் பிரிவினையும், வன்முறையுமே மேலோங்கும். 

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசின் நடவடிக்கைகள், பிரிவினை யைத் தூண்டுவதாகவே இருக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி நடக்க வேண்டிய ஆட்சி, ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் மனுதர்ம சாஸ்திரத்தின் படி நடக்க முயற்சிப்பதே இதற்குக் காரணம். இது எந்த விதத்திலும் நாட்டிற்கு நன்மை பயக்காது. இந்தியாவின் ஒற்று மையை கட்டிக் காக்காது. 

ஒரு மதவெறிக்கு மற்றொரு மதவெறி எப்போ தும் தீர்வாக இருக்க முடியாது. மதவெறியர்க ளை மக்கள் தனிமைப்படுத்திட வேண்டும். மத வெறி நீக்கி மனித நேயத்தை வளர்க்க அனை வரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

;