headlines

img

மணிப்பூர் மாநில மக்களின் துயரம்

இன கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த மாநிலமும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கடு மையான விலைவாசி உயர்வும், மணிப்பூர் மக்களை வாட்டி வதைக்கிறது. 

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப் பட்டுள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170 வரை விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு  உருளை ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அரிசி மூட்டை விலை ரூ.900லிருந்து ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு, வெங்கா யம் உள்ளிட்ட அனைத்துப்  பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. 

சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் மக்கள் அவதியுறுகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை அரசு கைவிட்டுவிட்டது என்றும், குடிநீர், உணவு கூட கிடைக்காமல் பசி யால் வாடுவதாகவும் குமுறுகின்றனர். 

ஆனால் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் மணிப் பூரில் எதுவுமே நடக்காதது போல நடந்து கொள் கின்றன. இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை விசிறி வளர்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேட பாஜக முயன்றதன் விளைவே மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 

தேர்தல் அரசியலுக்காக பல்வேறு மக்கள் சமூகங்களிடையே வெறுப்பை வீசி விடுவதை பாஜக தனது அரசியல் உத்தியாகவே பயன் படுத்துகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கும், பெரும்பான்மை சமூகமான மைத்தேயி மக்களுக்குமிடையே பிளவை ஏற் படுத்தியதே பாஜகதான். மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்குமாறு கோர, நாகா, குக்கி  பழங்குடி மக்கள் எதிர்ப்பு  தெரிவிக்க பிரச்சனை தீவிரமானது. துப்பாக்கிச் சூட்டிலும், கலவரத்திலும் நூற்றுக்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ளனர். வீடுகள் தீக்கி ரையாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கா னோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி மக்களை காப்பாற்ற முடியாமல் நட்டாற்றில் விட்டுவிட்டது. மணிப்பூரில் மட்டுமல்ல, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மதம், சாதி, இனம், மொழியை பயன்படுத்தி வெறுப்பு  அரசியலைத்தான் பாஜக விதைத்து வருகிறது. அண்மையில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவினர் இதே அணுகு முறையைத்தான் பின்பற்றினர். அதற்கான விலையை இன்றைக்கு மணிப்பூர் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியான பாஜகவுக்குள் மோதல் முற்றியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள்  முழு அளவில் செயல்பட வேண்டும்.

 

;