headlines

img

முளையிலேயே கிள்ளி எறிந்திடுக!

தமிழகத்தில் எப்படியாவது மதவெறித் தீயைப் பற்ற வைத்து,  குறுக்கு வழியில் அரசி யல் ஆதாயம் தேட சங்பரிவார் கூட்டம் தொடர்ந்து  முயன்று வருகிறது. அது எடுபடாத நிலையில்  தற்போது மதவெறி தலைக்கேறி நேரடி யாக வன்முறையைத் தூண்டுகிறது. 

திமுக துணைப்பொதுச்செயலாளர்  ஆ.ராசா மனுஅநீதி எப்படியெல்லாம் மக்களைப் பிரித்து, மிகவும் கீழ்த்தரமாகக் கொச்சைப் படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசி யிருந்தார். அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து, திரித்து இந்துக்களை ராசா இழிவு படுத்திவிட்டதாக, வழக்கம் போல் சங்கிகள் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உண்மை யில் இந்துக்களை இழிவு படுத்தியிருப்பது மனுநீதியும், சனாதனமும்தான். அதன் மீது கோபப்படாத சங்பரிவார் ஏன்  தொல்.திருமா வளவன், ஆ.ராசா போன்றோர் மீது பாய வேண்டும்? காரணம் அதே சனாதன வெறிதான்.  

சங்பரிவார் அமைப்பின் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ். அதன் கொள்கையும் கோட்பா டும் மனுநீதியை மீண்டும் நிலை நிறுத்துவது தான். ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல் வால்கர், சிந்தனைக் கொத்து என்ற நூலில், “பிராமணன்தான் தலை, அரசன்தான் கரம், வைசியன்தான் தொடை, சூத்திரன்தான் பாதம்.  கடவுளின் நான்குவித வெளிப்பாடாகக் கட்டமைக்கப்பட்டுள்ள சமுதாயத்தில் அவர வர் வழியில், அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப கட வுளை வணங்க வேண்டும். வர்ணாசிரமம்தான் சமூக ஒழுங்கு” எனக் கூறியிருக்கிறார். உண் மையில் இந்துக்கள் மனுநீதியைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்  பரிவார் அமைப்புகள் மீதுதான் கோபம் கொள்ள வேண்டும். ஆனால் அந்த கோபத்தை சங்பரி வார் கூட்டம் மிக நுட்பமாக மனுநீதியை விமர் சிப்பவர்கள் மீது திருப்பி விடுகிறது. 

ஆணாதிக்கத்திற்கு கீழ்ப்படிவதே பெண்க ளுக்கான ஒழுங்கு என மனுநீதி கூறுகிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் பாஜக விற்குப் பெரும்பான்மை இருந்தும் 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மறுக்கிறது. 1955-ல் நிறைவேற்றப்பட்ட இந்து திருமண சட்டம் பலதார மணத்தைத் தடை செய்கிறது. விதவை மறுமணத்தை அனுமதிக்கிறது. விவாகரத்து உரிமையைக் கொடுக்கிறது. இது சனாத னத்திற்கு எதிரானது எனவே நாங்கள்  இந்து திருமண சட்டத்தை எதிர்க்கிறோம் என ஆர்எஸ்எஸ் அறிவித்ததை மறந்து விடக் கூடாது.

தமிழகத்தில் சமீபகாலமாக இந்து முன்னணி உள்ளிட்ட  சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்ட அடிப்படையில் விஷமப் பிரச்சாரத்தின் மூலமும், மிரட்டியும் வன்முறையைத் தூண்டி வருகின்றனர்.  இதனை ஒரு போதும் அனு மதிக்கக் கூடாது.  அனைத்து ஜனநாயக சக்திக ளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மதவெறி யர்களைத்  தனிமைப்படுத்திட வேண்டும். 

;