headlines

img

சுயத்தை இழந்ததால் பல்லிளிக்கும் சுயநலம்

வால்மார்ட் வாரிசின் படகு மீது சாயம் வீச்சு 

வால்மார்ட் நிறுவனத்தின் வாரிசான நான்சி வால்ட னுக்கு சொந்தமான 30 கோடி டாலர் மதிப்பிலான நவீன சொகுசு படகு பார்சிலோனா  கடற்கரையில் நிறுத்தப் பட்டிருந்த போது காலநிலை செயல்பாட்டாளர்கள்  அதன் மீது வர்ணத்தை வீசினர். கடந்த இரண்டு மாதத்தில் இது இரண்டாவது போராட்ட நிகழ்வாகும்..

வியட்நாமுடன் அமெரிக்க ஒப்பந்தம் 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியட்நாம் சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் வியட்நாம்  நிறுவனங்களின் உயர் அதிகாரி கள் நடத்திய பேச்சுவார்த்தையில் குறைக்கடத்தி(செமி கண்டக்டர்), விமானம்  மற்றும் தொழில் நுட்பத்துறைகளில் வணிக உறவுகளை உருவாக்க ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.இதனையடுத்து விமா னங்கள் மற்றும்செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் புதிய ஒப்பந் தங்கள் கையெழுத்தாகின.

விமான இன்ஜினில் தீ

பயணத்தின்போது ஏர் சீனா விமானத்தின்  இன்ஜினில் தீப் பிடித்ததால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது .இதில் 9 பயணிகள் காயமடைந்தனர்.தரை இறங்கிய பிறகு பயணிகள் அவசர கால  கதவுகள் வழியாக  தரையிறக்கப்பட்டனர்.

முதலீடுகளை ஈர்க்க பாகிஸ்தான் திட்டம் 
வெளிநாட்டு முதலீடுகளை  ஈர்க்கும் வகையில் உள்நாட்டு அல்லது சர்வதேச வணிக நிறுவனங்களின் கடிதங்கள்  இருந்தால் வெளிநாட்டு வணிகர்களுக்கு எளிதாக விசா கிடைக்கும் வகையில்  விதிகளை தளர்த்தி பாகிஸ்தான் புதிய விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.

உபேர் ஓட்டுனரை தாக்கி கார் திருட்டு

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 62 வயதான உபேர் ஓட்டு நரை மூன்று பெண்கள் தாக்கி அவரது  காரை திருடி யுள்ளனர்.காரினுள் அமர்ந்திருந்த அவரை இரண்டு பெண்கள் வெளியே இழுத்துப் போட மற்றோரு பெண் அவரை ஆயுதத்தால் தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.