“இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை நடத்து வதற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எனவே இது நமது நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமானது. மிக அதிக எண்ணிக்கையில் நமது விமானப்படையின் பலத்தைக் காட்ட இருக்கிறோம்; நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் வெகுரக ஏவுகணைகள் உள்ளிட்ட அனைத்து வகையான படைகளையும் ஆயுதங் களையும் இறக்குவதற்கு தயாராகி வருகிறோம்; 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய நிலப்பகுதி யில் நமது படைகள் அணிவகுக்க இருக்கின்றன”.
அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரும், உக்ரைன் ராணுவத்துடன் அமெரிக்க ராணுவத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவருமான கலோனல் அலெக்சாண்டர் வின்ட்மான் சமீபத்தில் பகிரங்க மாக நிகழ்த்தியுள்ள பேச்சு இது. அமெரிக்க ராணு வத்தின் போர் தயாரிப்பு நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக மேற்கண்டவாறு அவர் கூறியிருக்கிறார்.
இத்தகைய போர் வெறிப் பேச்சுக்களுக்கு ரஷ்யா தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றை சர்வதேச ஊடகங்களில் எழுதியுள்ளார். உக்ரை னின் வரலாறு நெடுகிலும், அது எப்படி ரஷ்யா வோடு இணைந்தே இருந்திருக்கிறது; உக்ரை னில் ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் பெலாருஷ்ய மக்களும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் விரிவாக விவரித்தார்.
அதுமட்டுமல்ல, மன்னராட்சி காலங்களில் போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழ் உக்ரைனின் பல பகுதிகள் இருந்து வந்தன; சோவியத் சோசலிசப் புரட்சி 1917ல் மாமேதை லெனின் தலைமையில் நடைபெற்ற பிறகுதான் உக்ரைன் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட நாடு உதயமானது; லெனின் உருவாக்கிய திட்டத்தின் அடிப்படையில் உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் சோசலிச நாடுகளாக தங்களை பிரகடனம் செய்து கொண்டன; அதைத்தொடர்ந்து 1922ல் சோவியத் சோசலிச குடியரசு உதயமான போது உக்ரைன் சோசலிசக் குடியரசும், இப்பூவுலகின் பிரம்மாண்டமான சோசலிச நாடாக மலர்ந்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாக இணைந்தது.
அதைத்தொடர்ந்து 1924ல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்றும் விரிவாக விவ ரித்துள்ள புடின், உக்ரைனின் தலைவிதியை அந்நாட்டின் மக்கள் தீர்மானிக்கட்டும்; ரஷ்யா ஒரு போதும் உக்ரைனின் எதிரி அல்ல; ஆனால் அமெரிக்கா நுழைவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் முழங்கியிருக்கிறார். எனவே எந்தவிதத்திலும் அமெரிக்கா உக்ரைனை நேட்டோ கூட்டணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்பதே அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மை. அதை மீறுவது அமெரிக்காவுக்குத்தான் ஆபத்து. ஏனென்றால் ரஷ்யா என்பது ஆப்கனோ, இராக்கோ, லிபியாவோ அல்ல!