ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அவரது அர சமைப்புச் சட்டப் பொறுப்புகளை மீறிச் செயல் பட்டு வருகிறார். அவரது பேச்சுக்களும் நடவடிக் கைகளும் அவரது அதிகார எல்லையை மீறிய தாக உள்ளது. பல நேரங்களில் அவரது செயல் பாடுகள் அதிகப் பிரசங்கித்தனமாக உள்ளது.
அரசியல் சாசனக் கடமையை நிறை வேற்றும் பொறுப்பே அவருக்கு வழங்கப்பட்டுள் ளது; மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை மிரட்டுவது அல்லது அரசின் செயல் பாடுகளை முடக்கும் வகையிலே செயல்படு வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசமைப்புச் சட்டப்பிரிவுகளின் படி சட்டமன்றத்தில் மாநில அரசு தயாரித்துத் தரும் கொள்கை விளக்க உரையைத்தான் அவர் வாசிக்கமுடியும். அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் குறித்துத் தனிப்பட்ட முறையில் ஐயப்பாடு இருந்தால் அதுகுறித்து முறையான வழியில் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளமுடியும். ஆனால் ஒருபோதும் அந்த கருத்துக்களைத் தவிர்க்கவோ அல்லது கூடுதலாகக் கருத்துக் களை சேர்த்துப் படிக்கவோ அவருக்கு உரிமை இல்லை.
‘‘கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் தமிழகத் தில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளது என்ற வார்த்தை வெற்று விளம்பரப் பிரச்சார உரையாக இருந்தது. அதனால் அந்தப் பகுதியை வாசிப்ப தைத் தவிர்த்தேன்’’ என்று இப்போது ஒரு பேட்டி யில் ஆளுநர் ரவி கூறியிருக்கிறார். கொள்கை முடிவுகள் என்று ஓர் அரசு கூறும் போது, அதனை நீதிமன்றங்கள்கூட மறுப்பதில்லை. அப்படியி ருக்கையில் அதைப் பிரச்சாரம் என்று சொல்வ தற்கு ஆளுநரான இவருக்கு தகுதியும், உரிமை யும் இல்லை.
பேரவையில் ஆளுநர் உரையாற்றும் முன்பு அந்த உரை அவருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்த பின்னர் தான் அச்சில் ஏற்றப் படுகிறது. அந்த உரையின் மீது கருத்து கூறக் கூடியவர் ஆளுநர் அல்ல, சட்டப் பேரவை உறுப் பினர்கள்தான். அப்படியிருக்கையில் அந்த உரையில் இருந்த அனைத்தும் தவறு என அர சியல் கட்சித்தலைவர் போல் பேசுவது முறையற்றது.
அது மட்டுமல்ல, தனது சனாதன கருத்துக்கு ஏற்ப திருக்குறளைத் திரிப்பதும் சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைப்பதும் தனக்குத் தோன்றும் புனைவுகளை குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பாகப் பேசுவதும் சரியல்ல. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதைச் செய்யலாம்.
ஆளுநராக இருந்து கொண்டு சட்டவிரோ தமாக கருத்துக்களைத் தெரிவிப்பதும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதும் கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்கு எதிராக அரசியல் கட்சித்தலைவர் போல் தொட ரும் செயல்பாட்டால் அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்குத் தகுதியற்றவர். எனவே அவரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.