மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரான தஷ்மத் ராவத் முகத்தில் பாஜக வைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா எனும் கொடூரன் சிறுநீர் கழித்த காணொலிக் காட்சி நாடு முழுவ தும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏவான கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா குடிபோதையில் இந்த கொடூரச் செயலை செய்துள்ளான். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த மனிதத் தன்மையற்ற நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சந்தித்து இதை வெளியே சொல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டி யுள்ளனர். காணொலிக் காட்சி வெளிவந்தவு டன் பிரவேஷ் சுக்லா தன்னுடைய ஆதரவா ளர் அல்ல என்று பாஜக எம்எல்ஏ மறுத்திருக்கி றார். ஆனால் அவரோடும், மாநில பாஜக தலை வர்கள் பலரோடும் பிரவேஷ் சுக்லா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வேறு வழியில்லாத நிலையில் பிரவேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்துள்ளனர். சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்று கூறி அவரது வீட்டையும் இடித்துள்ளனர். சட்ட விரோ தமாக பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் வீடு கட்ட அனுமதித்தது எப்படி என்ற கேள்வி ஒருபுற மிருக்க, மக்களின் கோபத்தை திசை திருப்பவே பாஜக அரசு இத்தகைய நாடகத்தை நடத்து கிறது.
ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை அழைத்து பாதபூஜை செய்து மன்னிப்புக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார். மன விகாரம் பிடித்த ஒரு மனிதனின் அநாகரிகச் செயலாக மட்டும் இதை தனித்துப் பார்க்க முடியாது. சங் பரிவாரம் வளர்த்து வரும் சிறுபான்மை, தலித், பழங்குடி மக்களுக்கெதிரான வெறுப்பு அரசியலின் விளைவே ஆகும் இது.
இத்தகைய மிருகங்களைத்தான் பாஜக வளர்த்து விடுகிறது. சென்னையில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் முன்னாள் நிர்வாகி டாக்டர் சுப்பையா என்பவர் பக்கத்து வீட்டு மூதாட்டி வீடு முன்பு சிறுநீர் கழித்த விவகா ரம் நினைவுகொள்ளத்தக்கது. இவர் கைது செய்யப்பட்ட போதும் பின்னர் பாஜகவில் உயர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வரும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிராக 7,214 குற்றங்க ளும், பழங்குடியினருக்கு எதிராக 2,627 குற்றங்க ளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் பரி வாரம் நாட்டில் வெறுப்பு அரசியலை வளர்த்து விட்டு வருகிறது. மனிதத்தன்மையற்ற மனிதர்க ளையே அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அங்கு நடந்திருப்பது தனி மனித விகாரம் அல்ல. ஆபத்தின் அறிகுறி.