headlines

img

சகிப்பின்மை

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத் தில் பொது நிகழ்ச்சி ஒன்றில், தேர்தல் வாக்குறுதி கள் குறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குலாப்தேவியிடம் கேள்வி எழுப்பிய தற்காக பத்திரிகையாளர் ஒருவரை அம்மாநில பாஜக அரசு கைது செய்தது.

பாஜக இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் அளித்த புகாரில்  இளம் பத்திரிகையாளரான சஞ்ஜெய் ராணா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 323-இன் கீழ் வேண்டுமென்றே காயப் படுத்துதல்,பொது இடத்தில் அவமதிப்பு செய்தல், குற்றமிழைக்கும் நோக்கத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பாஜக ஆட்சி யில் நிலவும் ஊழல் முறைகேடுகளையோ அல்லது தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதி  குறித்தோ எந்த கேள்வியையும் பத்திரிகையாளர் கள் கேட்கக்கூடாது. கேட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் அல்ல, பல சம்பவங்க ளை உதாரணமாகக் காட்டமுடியும்.

பாஜக ஆளும் அல்லது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள  ஜம்மு -காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் சுதந்திர மாகச் செயல்பட முடியவில்லை. அரசுக்கு எதி ராக எழுதினால் அல்லது கேள்விகேட்டால் பயங்க ரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

காஷ்மீர் நரேட்டர் என்ற பத்திரிகையின் நிரு பரான ஆசிப் சுல்தான், 2018 ஆகஸ்ட் மாதம் முதல் (4 ஆண்டுகள் 3 மாதங்கள்) சிறையில் இருந்து வரு கிறார். அவர் ஆரம்பத்தில் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், ஆனால் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (பிஎஸ்ஏ)  மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மலையாள ஃப்ரீலான்ஸ் பத்திரிகையா ளரான சித்திக் கப்பன், 2020 ஆம் ஆண்டு அக்டோ பர் 5 ஆம்தேதி  உத்தரப் பிரதேசத்தில் கைது செய் யப்பட்டு 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களாகச் சிறையிலிருந்த பின்னர் சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீது பொய்யான மற்றொரு வழக்கை அம்மாநில அரசு பதிவுசெய்து தொடர்ந்து சிறையில் வைத் துள்ளது.  ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான செய்தியை அவர் தொடர்ந்து வெளியிட்ட காரணத்தால் பாஜக அரசாங்கத்தால் பழிவாங்கப்படுகிறார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் உல கப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.  அதிகா ரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களின் உரிமை குறிவைக்கப்படு கிறது.  சமூகத்தின் பிரதிநிதியாகச் செயல்படும் ஊட கவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியது ஆட்சியாளர்களிடம் கடமை. கைது, அச்சுறுத்தல்  போன்ற நடவடிக்கைகளால் பத்திரி கையாளர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந் தால் நல்லது.

;