headlines

img

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சர்ச்சைகள்

புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

முதலாவதாக கட்டடத்தை திறந்து வைக்க ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ள தேதி என்பது மகாத்மா காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப் பட்டவரும், இந்துத்துவா கருத்தியலின் மூலவர்க ளில் ஒருவருமான சாவர்க்கர் பிறந்தநாள் ஆகும். 

சாவர்க்கர் தன்னுடைய வாழ்நாள் முழுவ தையும் வெறுப்பு அரசியலை விதைப்பதற்காக பயன்படுத்தியவர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது மன்னிப்புக்  கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையா னவர். மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயின் குருநாதர். இவருடைய பிறந்த நாளில் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? 

இந்திய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய பல நாட்கள் உண்டு. இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் தொடர்பு டைய எத்தனையோ நாட்கள் உண்டு. ஆனால் மதச்சார்பற்ற இந்திய அரசியல் சாசனத்தையே ஏற்றுக் கொள்ளாத ஒருவரது பிறந்த நாளில் நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? இது மகாத்மா காந்தியையும், இந்திய விடுதலைப் போராட்டத்தையும், இந்திய அரசியல் சாச னத்தை உருவாக்கியவர்களையும் ஒருசேர அவ மதிக்கும் செயல் அல்லவா? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் சொல்ல மறுக்கிறது.

65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சென்ட ரல் விஸ்டா என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த புதிய கட்டடம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் வைக்கப்பட்ட புதிய சிங்கங்களின்  சின்னம் மூர்க்கத்தனமா கவும், கொடூரமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு கூட தொடரப்பட்டது. சார நாத் அருங்காட்சியகத்தில் உள்ள அரசு சின்னத் திற்கு மாறாக இந்த சிலை அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

குடியரசுத் தலைவரை புறக்கணித்துவிட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந் திர மோடி திறந்து வைப்பதும் சர்ச்சைக்கு உள் ளாகியுள்ளது. இந்த கட்டடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவின் போது அப்போதைய ஜனாதி பதி ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டார். இப்போது திறப்பு விழாவின் போது ஜனாதிபதி திரௌபதி முர்மு புறக்கணிக்கப்பட்டுள்ளார். நியாயமாக அரசியல் சாசன தலைவரான ஜனாதிபதிதான் நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால் பாஜக  ஆட்சியில் அனைத்து  மரபுகளும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. இப்போதும் அதுதான் நடக்கிறது. 

;