headlines

img

அதானி நிலக்கரி ஊழலை மூடி மறைக்கும் மோடி

இந்தோனேசியாவில் இருந்து இந்தியா விற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி குழுமம், போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

அதானி குழுமத்தின் இந்த ஊழல் முறை கேடுகளை, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) ஏடு அம்பலப்படுத்தியுள்ளது

இந்தோனேசியாவில் இருந்து இந்தியா விற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தங்குதடையின்றி இந்த நிலக்கரி இறக்கு மதி ஊழலை செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

2019 மற்றும் 2021-க்கு இடையிலான 32 மாதங்க ளுக்குள் அதானி நிறுவனம் இந்தோனேசியா விலிருந்து இந்தியாவிற்கு மேற்கொண்ட 30 நிலக்கரி ஏற்றுமதி வர்த்தகத்தை மட்டும் ஆய்வு செய்துள்ளது. இதில், கடந்த இரண்டு ஆண்டுகளில், அதானி குழுமமானது, தைவான், துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கடல்சார் போலி இடைத்தரகர்களைப் பயன்படுத்தி 5 பில்லியன் டாலர் (சுமார் 42 ஆயிரம் கோடி) மதிப்புள்ள நிலக்கரியை சந்தை விலையை விட இருமடங்கு விலையில் இறக்கு மதி செய்துள்ளதாகவும், அனைத்து ஏற்றுமதி வர்த்தக சந்தர்ப்பங்களிலும், இறக்குமதி நிலக்கரி யின் விலையை அதிகமாகக் காட்டி, அதானி நிறுவனம் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ கண்டறிந்துள்ளது.

சந்தையிலேயே நிலக்கரி விலை அதிகமாக உள்ளது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கித் தான் உங்களுக்கு மின்சாரம் தயாரித்து வழங்கு கிறேன். எனவே, மின்சாரக் கட்டணம் அதிகமா கத்தான் இருக்கும். அதை நீங்கள் தருவதைத்  தவிர வேறு வழியில்லை என்ற நிர்ப்பந்தத்தை அதானி மாநில மின் விநியோக நிறுவனங்களு க்கு ஏற்படுத்தியுள்ளார். அதன்மூலமும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதானி கொள்ளை லாபம் அடித்துள்ளார்.

முதலில் நிலக்கரி கொள்முதலிலேயே, தனது மறைமுக இடைத்தரகர் (Offshore) நிறுவ னங்களைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடிக ளை லாபமாக பார்க்கும் அதானி, பின்னர் மக்க ளிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை விற்று அதன்மூலமும் கொள்ளை லாபம் சம்பாதித்திருக்கி றார் என்பதுதான் பைனான்சியல் டைம்ஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும். அதானியின் இந்த ஊழலை அவரது நண்பரான மோடி ஆதரவு ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன. இவர்கள் எல்லோரும் கூட்டுக் களவாணிகள். தேசத்தையே கொஞ்ச கொஞ்சமாக அரித்து தின்னுபவர்கள்.