headlines

img

இளைஞர்களுக்கு இணையம் மட்டும் போதுமா?

பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி றது. அவர் வாக்களித்தபடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருந்தால் 20 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையில்லாதோரின் எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது மட்டுமல்ல, வேலையில் இருந்தவர்களும் வீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர். 

ஆனால் பிரதமர் மோடி வாய்ப்பந்தல் போடுவதில் மட்டும் ஒன்றும் குறைவில்லை. ‘மனதின் குரல்’ 106ஆவது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மேரா யுவபாரத்’ என்ற பெயரில் இளை ஞர்களுக்கான பிரத்யேக இணையதளம் உரு வாக்கப்படும் என்றும் இதில் இளைஞர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையதளத்தில் இணைபவர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பிர தமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, வழக்கம்போல வெற்று அலங்கார வார்த்தைக ளையே இப்போதும் உதிர்த்திருக்கிறார்.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் உள்ளூர்ப் பொருட்களை வாங்குமாறும், அதற்கு பணத்தை பயன்படுத்தாமல் யுபிஐ முறையில் பணம் செலுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். உள்ளூர்ப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டின் அனைத்து துறைகளையும் அந்நியருக்கு அகல திறந்துவிடும் போக்கை பின்பற்றும் ஒன்றிய அரசு மக்களுக்கு மட்டும் இலவச உபதேசம் வழங்குவதில் அர்த்தம் உண்டா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது, யுபிஐ முறையை ஊக்குவிப்பதும் அரசி னுடைய நோக்கம் என்று கூறப்பட்டது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது. அதை அதிகரிக்க ஒன்றிய அரசு எதுவும் செய்வதில்லை. ஆனால் டிஜிட்டல் கரன்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற பெயரில் தொடர்ந்து மக்களுக்கு அறி வுரை வழங்கப்படுகிறது. தங்களிடம் இல்லாத பணத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்பதுதான் மக்களின் கேள்வி?

நவம்பர் 15ஆம் தேதி பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடி மக்கள் பெருமை தின மாகக் கொண்டாடவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களின் வன நிலங்களை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு கைமாற்றி விடும் ஒன்றிய அரசு அவர்களை பெருமைப்படுத்துவதாகக் கூறுவது வெறும் ஏமாற்று வேலையே ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை.