headlines

img

தேர்வுகளின் பெயரால் அநீதி!

குடியரசுத் தினத்தன்று பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நடத்திய போராட்டம்  தேசம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள் ளது. தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கான ரயில்வே தேர்வில் நடைபெற்ற குளறுபடியை எதிர்த்து பாட்னா அருகே தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைப்ப தற்காக காவல்துறையினர் தடியடி நடத்திய போதும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமா னது. பீகார் மாநிலத்தில் மட்டுமல்ல அருகிலுள்ள  உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொந்த ஊரான பிரயாக்ராஜ் உட்பட பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ள நிலையில் இளைஞர்களின் இந்தப் போராட்டம் ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலி யாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக ரயில்வே தேர்வை ரத்து செய்வதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு குளறுபடியை போன்று அகில இந்திய அளவில் நடைபெறும் பல தேர்வுகளில் மாற்றங்கள் என்ற பெயரில் மிகப்பெரிய குளறுபடியை ஒன்றிய அரசு செய்துள்ளது. கடந்த முறை தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு ஒற்றை தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அந்த தேர்வு ஐந்து நிலைகளாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு சிலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒருசிலர் நான்கிலும் ஒரு சிலர் மூன்றிலும் தேர்வு பெற்ற போதிலும் ஒரு பிரிவு வேலைக்கு கூட தேர்வாகவில்லை.  

ரயில்வே ஆட்சேர்ப்பு மையத்தின் இந்த குளறு படியால் சரக்கு காவலர், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற பணிகளுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில பிரிவுகளுக்கு பட்டதாரி மாணவர்களோடு மேல்நிலை கல்வித் தகுதி பெற்ற மாணவர்களை ஒன்றாக தேர்வு எழுத வைத்தது ரயில்வே செய்த தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.  

இளைஞர்களின் கோரிக்கையில் உள்ள நியா யத்தை உணர்ந்து கொள்ளாமல் ரயில்வே வேலை பெற விரும்புவோர் ரயில் பாதைகளில் போராட்டம், போக்குவரத்திற்கு இடையூறு, ரயில்வே சொத்துக்க ளுக்கு சேதம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் ரயில்வே வேலையே இனி பெற முடியாது என்று எச்சரிப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது.  வேலையில்லாத இளைஞர்களை போராட்டத்தி ற்கு தள்ளிவிட்டதோடு ரயில்வே  வேலைகளுக்கு தகுதியற்றதாக மாற்றும் செயல் நியாயமற்றது. ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருப்ப தால் இரட்டை எஞ்சின் போல் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்றும் வேலை வாய்ப்புகள் கிடைக் கும் என்றும் கூறிய முதலமைச்சர் நிதீஷ் குமார் அமைதியாக இருப்பது சரியல்ல. 

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதோடு அவர்களை ரயில்வே நிர்வாகம் அழைத்துப் பேசவேண்டும். ரயில்வே வாரியம் முன்பு அறிவித்தவாறு ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும். குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ரயில்வே நிர்வாகம் செய்ய மறுத்தால் இன்று உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலத்தில் மட்டுமே நடைபெறும் போராட்டம் நாளைநாடெங்கும் பரவும். இத னால் ஏற்படும் விளைவுகளுக்கு ரயில்வே நிர்வாகமும்  ஒன்றிய பாஜக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

;