headlines

img

இவரது பொய்க்கு மட்டுமே வறுமை இல்லை

ஒன்றிய அரசின் கொள்கைகளால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் வறுமையிலிருந்து 13.50 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  ஜி20 நாடுகளின் வர்த்தக அமைப்பான ‘பிசினஸ் 20’ உச்சி மாநாட்டில் அவர் இவ்வாறு பேசி யுள்ளார். 

ஆனால் இந்தியப் பொருளாதாரம் குறித்த தரவுகள் பிரதமரின் கூற்றை மறுப்பதாக உள்ளன. ஏழைகளுக்கு ஆதரவான கொள்கை களை தமது அரசு கடைப்பிடிப்பதால் வறுமை நிலையிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு நடுத்தர வர்க்கத்தினராக உயர்ந்துள்ளதாக அவர் கொஞ் சம் கூட கூசாமல் கூறியுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவமின்மை அதிகரித்துள் ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு கூறியுள்ளது. 2011-12இல் ரூ.1501ஆக இருந்த தனிநபர் நுகர் வோர் செலவினம் 2017-18இல் ரூ.1446ஆக குறைந் தது. கொரோனா காலகட்டத்தில் மோடி அரசின் தவறான அணுகுமுறையால் புலம் பெயர் தொழி லாளர்கள் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சென்ற காட்சியை எளிதில் மறந்துவிட முடியாது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி ஆகியவற் றால் நொறுங்கிப் போன இந்திய மக்களின் வாழ்க்கை கொரோனா முடக்கக் காலத்தில் மேலும் மோச மானது. அதிலிருந்து இந்திய மக்கள் மீளமுடிய வில்லை. இந்தநிலையில் 13.50 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக மோடி கூறு வதில் அர்த்தமில்லை.

கொரோனா காலத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பு மருந்தை இந்தியா அனுப்பி யது என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஆனால் தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்க ளை புறக்கணித்து இரு தனியார் நிறுவனங்க ளுக்கே அனுமதி தந்ததோடு உள்நாட்டு மக்களுக்கே இலவசமாக தடுப்பூசி வழங்க மோடி அரசு முதலில் மறுத்ததை மறந்து விட முடியாது.

சந்திரயான் திட்டத்தில் தனியார் துறை பங்களிப்பும் இருந்ததாகக் கூறி ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளை குஷிப்படுத்த முயன்றுள்ளார் பிரதமர். விண்வெளித்துறையில் இதுவரை இந்தியா நிகழ்த்திய சாதனைகள் அனைத்திற் கும் இஸ்ரோ என்ற அரசு நிறுவனமே காரண மாகும். ஆனால் விண்வெளித்துறையிலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் எதிர் காலத்தில் அந்தத் துறையையும் கார்ப்பரேட் முத லாளிகளிடம் ஒப்படைத்து நாட்டை நட்டாற்றில் விட பாஜக அரசு முடிவு செய்துவிட்டது என்ப தையே பிரதமரின் பேச்சு உணர்த்துகிறது.

அடுத்த 5- 7 ஆண்டுகளில் நடுத்தர மக்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள் என்று கூறுவது உண்மையா என்பது ஒருபுற மிருக்க, மக்களை பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாகவே பிரதமர் கருதுகிறார் என்பதே அவரது பேச்சின் உட்பொருளாகும்.