headlines

img

அபகீர்த்தியை அகற்றுவோம்!

பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசியலின் இலக்கணம், சிந்தனை, நாகரிகம் ஆகியவை மாறிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

உண்மைதான். பிரதமர் மோடி தலைமையி லான பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள், நெறி முறைகள் நிறைய மாறிவிட்டன; பாஜக அரசால் மாற்றப்பட்டு விட்டன. பல்வேறு நிலைக்குழுக் கள் சட்டமுன்வடிவுகள் பற்றி ஆலோசனை, பரிந் துரைகள் வழங்கும் நடைமுறை முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் களை கூண்டோடு இடைநீக்கம் செய்து வெளி யேற்றுவது வரலாற்றுச் சாதனையாகி விட்டது. அதன் பிறகு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் படுவது வாடிக்கையாகிவிட்டது.

குறிப்பிட்ட சில வார்த்தைகளை, அரசை குறைகூறுவதாக கருதப்படும் வார்த்தைகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் பயன்படுத்தக் கூடாது என்று கூட பாசிச பாணியி லான புதிய வரையறை- இலக்கணம் உருவாக் கப்பட்டது. வெறுப்புணர்வைத் தூண்டும் வகை யிலான பேச்சுக்களை கட்சித் தலைவர்கள், பாஜக பரிவார அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிரதமரே பேசிடும் அளவுக்கு சிந்தனை மாற்றப்பட்டிருக்கிறது. ‘சாமியார் கள் நடத்திய நாடாளுமன்றம்’ முதல் நாடாளு மன்றம் வரை இந்த நடைமுறைகளும் நடவ டிக்கைகளும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் சிறுபான்மையினரைத் தாக்குவ தில் பரிவார அமைப்புகள் மட்டுமின்றி, அரசு அமைப்புகளும் காவல்துறை உள்பட புதிய புதிய வடிவங்களை உருவாக்கியதில் மோடி ஆட்சி சாதனை புரிந்திருக்கிறது. உ.பி.மாநிலத்தில் துவங் கிய புல்டோசர் அரசியல், தில்லி மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் புதிய பரிமாணத்தைத் தந்திருக்கிறது.

பொதுவாக தங்களது ஆட்சியின் சாதனைக ளைக் கூறி வாக்குக் கேட்பது என்ற நடை முறையை, நெறிமுறையை மீறி சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினை, வெறுப்புப் பிரச்சாரம் கூடாது என்பதை மாற்றியிருக்கிறது பாஜக ஆட்சி. முந்தைய ஆட்சியாளர்களை அவதூறாகவும் தரக்குறைவாகவும் தவறாகவும் சித்தரிப்பதில், பேசுவதில் மோடியே ‘முன்னோடி’ யாகவும் விளங் கும் வகையில் அரசியல் நாகரிகம் முற்றிலும் மாறியிருக்கிறது.

மொத்தத்தில் இந்துத்துவா மதவெறிப் பிரச்சா ரத்தை, பாசிச பாணியிலான வெறியாட்டங் களை, கோயபல்ஸ் பாணியிலான பொய்களின் அணி வகுப்பை இந்திய தேர்தல் வரலாற்றில் மட்டு மல்ல, அரசியல் வரலாற்றிலேயே பார்த்திராத வகையிலான தீய அபகீர்த்தி அனைத்தையும் அடியோடு ஒழிக்க பாஜக ஆட்சியை அகற்று வதே இந்தியாவின் மாண்பைக் காக்க விரும்பு வோரின் கடமையாகும்.

;