headlines

img

நியாயமற்ற கட்டண உயர்வு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றை உயர்த்தி ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள உத்தரவு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’ கல்வியை வர்த்தகமாக நடத்தி வரும் தனியார் கல்வி நிறு வனங்கள் நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் மட்டுமே இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. 

ஏஐசிடிஇ புதிய உத்தரவின்படி, மாணவர்கள் பி.இ, பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளில் சேரு வதற்குக் குறைந்தபட்ச கட்டணமாக 79,600 ரூபாயும் அதிகபட்சமாக 1 லட்சத்து 89 ஆயிரத்து 800 ரூபாயும் செலுத்த வேண்டும். இவை ஒரு பருவத்துக்குத் தான். பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் தற்போது குறைந்தபட்சம் ரூ. 55 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.

தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த மாண வர்கள் ஒரு பருவத்துக்கு 67 ஆயிரத்து 900 ரூபா யும் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 900 ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோல், முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளுக்கு பருவம் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 1,41,200 ரூபாயும் அதிகபட்ச மாக 3,04,000 ரூபாயும் செலுத்த வேண்டும். 

கட்டண உயர்வு குறித்து ஏஐசிடிஇ மாநில அரசுகளோடு கலந்து பேசவில்லை.  பொறியி யல் கல்லூரிகளுக்கான கட்டண உயர்வு தொடர்பாக மாநில அரசு குழு அமைத்துச் செயல் படுத்தும் போது ஏ.ஐ.சி.டி.இ உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.  கட்டண உயர்வை இவர்களே தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில பிரத்யேகப் பிரச்சனைகள் உள்ளன. ஒரு கல்லூரியைக் கட்டுவதற்கு இடம் ஒதுக்குவது உள்பட பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்குகிறது. அந்தக் கல்லூரியின் தன்மை என்ன என்பதும் மாநில அரசுக்குத் தெரியும். எனவே தான் கட்ட ணத்தை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுக ளிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று கல்வி யாளர்கள் கூறுகிறார்கள். 

தொழிற்கல்விக்கான குறைந்தபட்ச கட்டணமே  79 ஆயிரம் ரூபாய் என்றால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களால் இவ்வளவு தொகையைச் செலுத்தி தங்களது குழந்தைகளைப் படிக்கவைக்க முடியுமா? கல்வி என்பதை சந்தை தீர்மானிக்கக் கூடிய விஷய மாக மாற்றிவிட்டது ஒன்றிய அரசு. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆதரவானதா கவே ஏஐசிடிஇ செயல்பாடு உள்ளது. குறைந்த பட்ச, அதிகபட்ச கட்டணம் என நிர்ணயிப்பதால் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் அதிகபட்ச கட்டணங்களை வசூலிப்பதில்தான் குறியாக இருப்பார்கள்.  கல்லூரிகளின் செலவை மாண வர்களிடம் இருந்து பெறுகின்ற கட்டணத்திலி ருந்துதான் ஈடுகட்ட வேண்டும் என்பதும்  நியாய மற்ற அணுகுமுறையாகும்.

 

;