மாவட்ட நீதிபதிகள் உடனான அணுகு முறையில் காலனியாதிக்க மனப்பான்மையை யும் அதிகார கலாச்சாரத்தையும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கைவிட வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறியுள்ளது உண்மையில் வரவேற்கத்தக் கது. நீதிபதிகள் மனம் கொள்ளத்தக்கது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும் போதே மேற்கண்டவாறு சந்திரசூட் அறிவுறுத்தி யுள்ளார். விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் காலனியாதிக்க மனோபாவம் இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியில் இருப் பதை போல இந்திய நீதித்துறையிலும் இருப்ப தையே அவரது பேச்சு உணர்த்துகிறது. அதிலிருந்து நீதிபதிகள் விடுதலை பெற வேண்டும்; மாறிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருப்பது மகிழ்ச்சியே.
நீதித்துறையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் நீதியமைப்பின் மைய மாக மாவட்ட நீதிமன்றங்கள் கருதப்படாத வரை யில் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார். ஏனெ னில் ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் மீது விசுவாசமாக இருப்பதை விட அவர்களின் வழிகாட்டு நெறியான மனு தர்மம், சனாதன தர்மத்தின் மீது பற்றுக் கொண்டி ருப்பதையே அவர்களது ஆட்சியின் நட வடிக்கைகள் உணர்த்துகின்றன.
மாவட்ட நீதிபதிகளை கீழமை நீதிபதிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் நமக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் அல்ல. அவ்வாறு அழைக்கப்படுவதை தவிர்க்க நான் முயற்சி களை மேற்கொள்வேன் என்று தலைமை நீதிபதி கூறியிருப்பது பாராட்டத்தக்கது. அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்ட மைப்பை மேம்படுத்த பெருமளவிலான முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி யிருக்கிறார். அதை ஆட்சியாளர்கள் நிறை வேற்றினால்தான் வழக்குகள் தேக்கம் அடை வது குறையும். ஏனெனில் இப்போது மாவட்ட நீதிமன்றங்களில் 25 சதவீதமும், உயர்நீதி மன்றங்களில் 30 சதவீதமும், உச்சநீதிமன்றத்தில் சில இடங்களும் காலியாகவுள்ளன என்று அவர் கூறியிருப்பது ஆட்சியாளர்களால் கவனிக் கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத்திலேயே 71 ஆயிரம் வழக்கு கள் தேங்கியிருக்கின்றன என்பது கவலை யளிக்கும் விசயமாகும். வழக்குகளை பட்டிய லிடுவதற்கு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த விரும்புகிறேன் என்று கூறி யிருக்கும் அவர் ஜம்மு- காஷ்மீர் மாநிலத் திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கு 2 ஆண்டுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் இருப்பதை மாற்றிட வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.