headlines

img

பாம்பே சர்க்கஸ் முடிவுக்கு வந்தது

மகாராஷ்டிராவில் திடீர் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் திடீர் துணை முதல்வர் அஜித்பவார் ராஜி னாமா செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இவர்களை நாற்காலியில் அமரவைத்து சித்து விளையாட்டில் ஈடுபட்டவர்களும், இந்த இழி வான செயலை சாணக்கியத்தனம் என்று வெள் ளையடித்த ஊடகங்களும் இப்போது தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பதவிப் பித்து தலைக்கேறியவர்களும், அவர்களது கை, காலைப் பிடித்து காரியம் சாதித்துக்  கொள்ள நினைப்பவர்களும் எதற்கும் வெட்கப்படமாட்டார்கள் என்பதே அனுபவமாக வுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைத்தபோதும், கூட்டணிக் கட்சி யான சிவசேனா ஒத்துழைக்காததால் ஆட்சி யமைக்க இயலாது என முதலில் ஒதுங்கியது. ஆனால் எப்படியாவது பதவியைப் பிடித்து விட வேண்டும், அதற்காக எத்தகைய ஜனநாயக விரோத, அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடு படலாம் என்பதே மோடி -அமித்ஷா ஜோடியின் சூத்திரமாக உள்ளது. தங்கள் வேலையை மகாராஷ்டிராவில் காட்டி தற்போது இருவரும் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். 

ஆளுநர், சிவசேனை-தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த அவகாசத்தை வழங்காமல் இடையிலேயே சட்டசபையை கலைத்து ஜனாதிபதி ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டது. வழக்கமாக இந்த அவகாசத்தை குதிரை பேரத்திற்கு பயன்படுத்துவதே பாஜகவின் பாணி. ஆனால் போதுமான அளவு குதிரைகள் சிக்காததால் அஜித்பவார் போன்ற ஒற்றைக் குதிரையைக் காட்டி மாயாஜால வேலையில் ஈடுபட்டனர்.   

இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிகழ்வாக அதிகாலை இரண்டரை மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்ட தும் காலை ஏழரை மணிக்கு பாஜகவை அழைத்து பட்னாவிஸ்சை முதல்வர் பதவியேற்க வைத்ததும் நடத்தப்பட்டது. பாஜகவின் பதவி வெறிக்கு ஆளு நர்கள் ஒத்துழைப்பது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் இதில் ஜனாதிபதியையும் சேர்த்து கோர்த்துவிட்டது அந்தப் பதவியையே கீழிறக்கம் செய்வது போல் அமைந்து விட்டது. 

அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவின் 12 ஆவது விதியை பயன்படுத்தி பிரத மர் நரேந்திர மோடியே நேரடி உத்தரவு பிறப்பித்தே ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்ட வினோதம் நடந்தது. தங்கள் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளின் ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ள முடியாததும் அதிகாரத்தின் மீதான ஆழ்ந்த வெறி யைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.

உச்சநீதிமன்றம் கெடுவிதித்த நிலையில் பெரும் பான்மையை நிரூபிக்க வழியே இல்லை என்ப தால்தான் தற்போது பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். கபட நாடகத்தில் இவர்கள் நடிகர்களே. இந்த நாட கத்தை இயக்கியவர்களுக்கு என்ன தண்டனை?

;