headlines

img

நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டம்

ஜேஎன்யு எனப்படும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்பேரவைத் தேர்தல்களில் இடதுசாரி மாணவர் கூட்டணி  மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 

ஜேஎன்யு, இடதுசாரி சிந்தனைகளின் பக்கம் தொடர்ந்து உறுதியாக இருப்பதில் சங்  பரிவாரத்துக்கு மிகப்பெரிய உறுத்தல் இருந்து வருகிறது. சாம தான பேத தண்டம் என அனைத்து சூழ்ச்சிகள் செய்த பின்னரும் பெரும்பான்மை ஜேஎன்யு மாணவர்கள் காவிக்கூட்டத்தின் பக்கம் சாயவில்லை.

சென்ற முறை தேர்தல்  2019ம் ஆண்டு நடை பெற்றது. அதன் பின்னர்தான் பல்கலைக்கழ கத்தில் மிகப்பெரிய வன்முறைக் கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன. பாஜக மாணவர் அமைப் பான ஏபிவிபியும் தில்லி காவல்துறையும் இணைந்து துணை வேந்தரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து  இடதுசாரி மாணவர் தலைவர்களை சரமாரியாக தாக்கினர். அதில் இந்திய மாணவர் சங்கத்தின் ஆயிஷே கோஷ் தலையில் பெரும் காயம் ஏற்பட்டது. அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என அப்பட்டமாக தெரிந்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிகழ்வுக்கு பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதர வாளர்கள் நியமிக்கப்பட்டனர். காவிக்கும்ப லுக்கு தாளம் போடுபவர் துணைவேந்தராக நிய மிக்கப்பட்டார். மாணவர் சேர்க்கையில் பல விதிகள் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட் டன. இதன் மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் பல்கலைக் கழகத்துக்குள் மாணவர்களாக அனு மதி பெறுவதை தடுக்க முயன்றனர். கோவிட்டை  காரணம் காட்டி பேரவைத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டன.

5 ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தேர்தல் பிரச்சா ரத்தின் பொழுதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கடைசி ஆயுதமாக ஒரு நீசத்தன மான செயல் அரங்கேற்றப்பட்டது. இடதுசாரி கூட்டணி சார்பாக பொதுச் செயலாளருக்கு போட்டியிட்ட சுவாதி சிங்கின் மனு செல்லாது என பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென அறி வித்தது.  ஆனால் இடதுசாரி மாணவர் அமைப்பு கள் மிக பக்குவமாகவும் சாதுர்யமாகவும் இதனை எதிர்கொண்டனர்.  ‘பாப்சா’ எனும் அமைப்புக்கு பொது செயலாளர் பதவிக்கு மட்டும் ஆதரவு அளித்தனர். ‘பாப்சா’ என்பது பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கம் ஆகும். 

6000 முதல் 7000 மாணவர்கள்தான் வாக்க ளித்தனர் என்றாலும் ஜேஎன்யு தேர்தல் முடிவுகள் தேசம் முழுவதும்  முற்போக்காளர் களால் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  அதே சமயம் சங் பரிவாரத்தினருக்கு இந்த முடிவுகள் ஏமாற்றத்தை மட்டுமல்ல; ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜேஎன்யு தேர்தல் முடிவுகள்  2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் பிரதி பலிக்கும் என்பதில் ஐயமில்லை. 

;