headlines

img

நம்பிக்கையற்ற பொருளாதாரம்

நாட்டின் பொருளாதாரம் மிக வலுவாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொல் கிறார்கள். ஆனால் உண்மை நிலை அவ்வாறாக இல்லை. பாஜக அரசாங்கத்தின் கொள்கை களால் வேலையின்மை, அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் நடப்பு நிதியாண்டில் 7விழுக்காடாக இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் பொருளாதார நிபுணர்கள் அதை மறுக்கிறார்கள்.

சர்வதேச அளவில் இந்தியா  மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறவேண்டும் என்றால் அதற்கான வலுவான கட்டமைப்புகள் அவ சியம். நாட்டில் 65 கோடி பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்தியா உலகிலேயே அதிக மான இளைஞர்களை கொண்ட நாடு என்று பெருமைப்பட்டு பயனில்லை. அந்த இளைஞர் பட்டாளத்தை திறன்மிக்க மனிதசக்தியாக மாற்றவேண்டும். இதை கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு செய்யாமல் இளைஞர்களை ஒப்பந்த ஊழியர்களாகவும் தற்காலிக ஊழி யர்களாகவும் கொத்தடிமைகளாக மாற்றிஉள்ளது.

நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டை 2047-இல்  கொண்டாடும் போது இந்தியா உலகில் இரண்டா வது மிகப்பெரிய  பொருளாதாரத்தை கொண்ட  நாடாக மாறும் என்றும் அதற்கான பணிகள் ஏற் கெனவே தொடங்கிவிட்டது என்றும் பிரதமர் கூறுகிறார். விளம்பரங்களில் தான் அரசு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி யின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் சாடி யிருப்பது முற்றிலும் பொருத்தமானதே.

பாஜக ஆட்சியாளர்கள் சொல்வது போல வருங்காலத்தில் வளர்ச்சி ஆஹா...ஓஹோ... என்று இருக்கப்போவதில்லை. காரணம்  நாட்டில் உள்ள குழந்தைகளில், உயர்கல்வியை எட்டு வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெருந்தொற்றுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து விட்டது. நாடு முழுவதும் ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளில் இடை நிற்றல் விகிதமும் அதிகரித்துள்ளது.  குழந்தை களின் கற்றல் திறன் இப்போது 2012-க்கு முந்தைய நிலைக்குச் சென்றுவிட்டது. இந்தியாவில் எழுத்தறிவு விகிதங்கள் வியட்நாம் போன்ற பிற  ஆசிய நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது. பட்ஜெட்டில்  உயர்கல்விக்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டை காட்டிலும் சிப் உற்பத்திக்கான மானியங்களுக்கு மோடி அரசு அதிக நிதி  ஒதுக்கியுள்ளது. இது வளர்ச்சிக்கான நட வடிக்கையாக இல்லை என்ற பொருளாதார நிபு ணர்களின் கருத்து நியாயமானது. எனவே மத்தியில் புதிதாக அமைய உள்ள ‘இந்தியா’ கூட்டணி அரசு மாற்று பொருளாதார திட்டங்ளோடு நம்பிக்கையளிக்கும் அரசாக அமைய வேண்டும்.

;