headlines

img

எது தேசத் துரோகம்?  

ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போடவில்லை யென்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கலை ஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட 49 பேர் கடிதம் எழுதினர். இதுகுறித்து பிரதமர் மோடி எந்த பதிலும் கூறவில்லை.  ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் தன்னுடைய வழக்கமான பாணியில் பதில் கூறியது. இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த கவுசிக் சென் என்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.  கேரளத்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் அச்சு றுத்தப்பட்டார். அவரை பாகிஸ்தானுக்கு போகு மாறு இந்துத்துவா கூட்டம் மிரட்டியது.  மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறா கூலிப்படை போல சிலரை தயார் செய்து இந்துத்துவா வெறியர்களுக்கு ஆதரவு தெரி விப்பதுபோல் கடிதம் எழுத வைத்தது.  பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இயக்குநர் மணிரத்தினம், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.  தற்போது அடூர் கோபாலகிருஷ்ணன், மணி ரத்தினம், ராமச்சந்திர குகா, அபர்ணா சென், கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஜெய்ஸ்ரீராம் என்ற பெயரில் படுகொலை செய்பவர்களை கட்டுப்படுத்தக் கோரிய ‘குற்றத் திற்காக பிரிவினைவாத போக்குகளுக்கு ஆதர வளித்ததாகவும், தேச துரோகம், பொது தொல்லை, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் பொது அமைதியை குலைத்தல்’ உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தலித் மற்றும் சிறுபான்மை மக்களை தாக்கி படுகொலை செய்வதை பிரதமர் என்கிற முறை யிலும், பாஜகவின் தலைவர் என்ற முறையிலும் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு கூறுவது எப்படி பிரிவினை சக்திகளை ஆதரிப்பது ஆகும்.  அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகை யில் இவர்கள் மீது வழக்குப்பதிய ஒரு நீதிபதி உத்தரவிட்டிருப்பது விசித்திரமாக உள்ளது. வழக் கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் பெரும்பகுதி மக்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறை குறித்து செய்தி வெளி யிடுவது கூட தடுக்கப்படுகிறது. ராமரின் பெயரை கூறிக்கொண்டு ஒரு காட்டுமிராண்டி கும்பல் வன்முறையில் ஈடுபடும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கில்லாதவர்கள் அதை சுட்டிக் காட்டுபவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடர்வது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்க்கும் செயலாகும். இதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்தாக வேண்டும்.

;