headlines

img

ஆரம்பமே சரியில்லை

உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரத் திற்கு செல்லும்போது இதனைக் காணமுடிகிறது. முசாபர் நகர் மாவட்ட பாஜகவின் நடப்பு சட்ட மன்ற உறுப்பினரான விக்ரம் சாய்னி பிரச்சாரத் திற்காக ஒரு கிராமத்தில்  பொதுமக்களை சந்திக்க சென்ற போது ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார். கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதியில் எந்தவித வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை என்ப தால் அவரை விரட்டியடித்ததாக  மக்கள் கூறு கிறார்கள்.  மாநிலம் முழுவதும் இதேநிலைதான். 

யோகி ஆதித்யநாத் அரசு ஐந்தாண்டுக் காலத்தில் வளர்ச்சிப்பணிகளை கவனம் செலுத் தாமல் சிறுபான்மை மக்களை ஒடுக்குவதில் குறியாக இருந்தது. லவ் ஜிகாத் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் முஸ்லீம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.  

வளர்ச்சிப்பணிகள் குறித்து மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது என்பதை அறிந்த பிரதமர் மோடி பாஜகவின் சரிவைத் தடுத்து நிறுத்த  தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் வாரத்திற்கு மூன்று முறை  தில்லியிலிருந்து உத்தரப்பிரதேசத் தின் முக்கியமான நகரங்களுக்குப் பறந்தவண்ணம் இருந்தார். பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களை ஏமாற்ற பாஜக கையாண்ட இந்த தந்திரம் பலிக்கவில்லை.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்  கடந்த 30 ஆண்டு களில்  பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டியே நிலவி வந்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் பாஜக எளிதாக வெற்றிபெற்று வந்தது. முதல்முறையாக இந்தத் தேர்தலில் பாஜக-சமாஜ்வாதி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த காலங்களில் சந்தர்ப்பவாத நிலை எடுத்த பகுஜன் சமாஜ் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவர் மாயாவாதி இந்த தேர்த லில் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவித்து விட்டார்.

சமாஜ்வாதி வெற்றிபெறுவது உறுதி என உள வுத்துறை தெரிவித்துள்ளதால் அக்கட்சியின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்த  மத்திய ஏஜென்சி களை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. சமாஜ் வாதி கட்சித்தலைவர்  அகிலேஷ்யாதவ் உறவினர் கள் மற்றும் அக்கட்சியின் முக்கியத்தலைவர்கள் வீடுகளில் திடீர் திடீர் என சோதனை நடத்தப்படு கிறது. மறுபுறம் பாஜக மூழ்கும் படகு என்பதை அறிந்த முன்னணி தலைவர்கள் பலர் அக்கட்சி யிலிருந்து விலகி சமாஜ்வாதியில் ஐக்கியமாகி வரு கிறார்கள். இந்த சரிவை மூடி மறைக்க முலாயம் சிங்கின் உறவினர்கள் சிலரை பாஜக வளைத்துள் ளது. 

பாஜகவின் இந்த தந்திரங்கள்  ஏதுவும் இந்தத் தேர்தலில் எடுபடாது என்று வழக்கமாக அக் கட்சியை ஆதரிக்கும் முன்னேறிய வகுப்பினரான பிராமணர்களே தெரிவிக்கிறார்கள்.  பாஜகவுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஓரணியில் திரண்டுள்ளதால் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி அக்கட்சிக்கு ஏற் பட்டுள்ளது. இதனால் அக்கட்சியின் தலை வர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளனர். உ.பியில் இருந்து வரும் இந்த சமிக்சை நல்ல அறிகுறி.

;