headlines

img

ஆபத்தான அலட்சியம்!

மக்களின் உயிரை காவு வாங்கும் வகையில் தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் இந்தியா வில் விநியோகிக்கப்பட்டு வருவதாக வெளி வந்திருக்கும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியளிப்ப தாக இருக்கிறது.

2017 புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் மட்டுமே இருக்கி றார். 90,343 பேருக்கு ஒரு அரசு மருத்துவனை என்ற அடிப்படையில்தான் மருத்துவ வசதி இருக் கிறது. ஆனால் உலக அளவில் மருந்துகள் விற்ப னையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. அப்படி உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 34 சதவிகிதம் தரம் குறைந்தவையாகவும் ஆபத்தை விளை விக்கக் கூடியதாவும் இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் செய்த சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரதம மந்திரி பாரதிய ஜனாயுஷாதி பரியோ ஜனா என்கிற பெயரில் மத்திய அரசு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் வகையில் மருந்தகங்களை ஏற்படுத்தி பாஜக ஆதரவாளர்க ளின் கைகளில் கொடுத்திருக்கிறது. அந்த மருந்த கங்களில் விற்கப்படும் மருந்துகளை பரிசோதனை செய்ததில் 18 மருந்து நிறுவனங்கள் வழங்கிய மருந்துகளில் 25 தொகுப்புகளில் உள்ள மருந்துகள் தரம் குறைந்தவை என தெரிய வந்திருக்கிறது. இதில் 17 நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் உறுதிப்படுத் தின. 47 ஆயிரம் மாதிரி மருந்துகளில் 3.16 சதவிகி தம் தரமற்றவையாகவும், 0.02 சதவிகிதம் போலியா னவை என்று மக்களவையிலேயே தெரிவிக்கப் பட்டது.

அண்மையில் நெஞ்செரிச்சல் மருந்தான  ரானிடிடினில் அளவிற்கு அதிகமான நைட்ரோச மைனை பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டது. இது புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தது. உடனே இந்த மருந்தை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் தடை செய்தன. சந்தைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டது. ஆனால் இந்தியாவில் உடனே தடை செய்யவில்லை. மாறாக அந்தப் பொறுப்பை மத்திய அரசு, மாநில அரசுகள் மீது சுமத்தியது. அதற்குள் பல இடங்களில் அந்த மருந்துகள் விற்றுத் தீர்ந்தன. அப்படியென்றால் ஆபத்து ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்ட வர்களுக்கு யார் பொறுப்பாவது? மத்திய அரசு பெரும் மருந்து நிறுவனங்களிள் மேல் காட்டும் அக்கறையில் ஒரு சிறு அளவு கூட மக்கள் நலனில் காட்டவில்லை. 

2015 முதல் 2019 வரை ஜார்க்கண்ட் மாநிலத் தில்  மட்டும் 1723 மருந்துகள் தரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 7 மருந்துகள் குறித்து மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது போன்று இந்தியா முழுவதும் கண்டறியப்பட்ட போலி மருந்து நிறுவனங்கள் மீது கூட மத்திய அரசு இதுவரை  முறையான நடவடிக்கை எடுக்கவில்லை .

லாபவெறியில் மக்களின் உயிரோடு விளையா டும் மருந்து நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல் ஊக்குவிப்பது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

;