headlines

img

அவர்களுக்கான வேலை தடையின்றி நடக்கிறது

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட் டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு இந்திய பெரும் முதலாளிகள் தங்களது கொள்ளை வேட்டையை தீவிரப்படுத்த துவங்கி யுள்ளனர்.இதற்கு மத்திய அரசும் அனைத்து வகையிலும் துணை நிற்கிறது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு குழுக்கள் இந்த நெருக்கடி யான காலத்தில் பலமுறை வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி சர்ச்சைக்குரிய பல் வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. 

மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கக் கூடிய, சுற்றுச்சூழலை பெருமளவு பாதிக்கக்கூடிய கட்டுமானப்பணிகள்,சுரங்கத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மக்களின்  கவனம் முழுவதும் நோய் தொற்று மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து திரும்பியிருக்கும் நிலையில் 922 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றக் கட்டிடத்தை புதி தாக கட்டுவதற்கான திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது இந்த ஆடம் பரமான அவசியமற்ற கட்டுமானம் தேவை தானா என்பது ஒருபுறம் இருக்க, தலைநகர் தில்லியில் பசுமையை பாதிக்கும் என்ற வாதத்தை யும் மோடி அரசு கவனத்தில் கொள்ளவில்லை.உச்சநீதிமன்றமும் கூட இதில் உரிய முறையில் தலையிட மறுக்கிறது.இதுதொடர்பான வழக்கில் நழுவலான நிலையையே எடுத்துள்ளது. 

வன ஆலோசனை கவுன்சில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கூடி அருணாச்சல பிரதேசத்தில் 1150 ஹெக்டேர் பரப்பளவில் மழைக் காடுகளை அழித்து இட்டாலியன் ஹைட்ரோ பவர் திட்டத்திற்கும் தெலுங்கானாவில் யுரேனிய சுரங்கத்திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 சுரங்கம் மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கு வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் வாழ்வு முடங்கிக்கிடக்கும் நிலை யில் முதலாளிகளின் கொள்ளை திட்டத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்க வேண்டிய அவசியம் என்ன?

வங்கிகளை சூறையாடிவிட்டு தப்பிஓடிய முதலாளிகளுக்கு மேலும் கடன் தள்ளிவைப்பு சலுகை மூலம் 68 ஆயிரம் கோடி ரூபாய் கபளீகரம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், தள்ளு படி செய்யவில்லை,கணக்குவழக்கை நேர்செய்கி றோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லா மல் மத்திய ஆட்சியாளர்கள் வியாக்கியானம் செய்கின்றனர். 

கோடானுகோடி தொழிலாளர்கள் நாளைய வாழ்வு எவ்வாறு இருக்கும் என தெரியாமல், கலங்கி நிற்கின்றனர். பெருமளவு வேலையிழப்பு இருக்கும் என்ற அபாய அறிவிப்புகள் ஏழை தொழிலாளர்களை மட்டுமின்றி நடுத்தர வர்க்கத் தினரையும் நடுங்க வைக்கிறது. ஆனால் இப்போ தும் கூட மோடி அரசு தன்னுடைய கார்ப்பரேட் பாசத்தையே காட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க்கை உருவாக்கியிருக்கிற பெரும் நெருக்கடி கோப புயலாக, ஆவேச அலையாக உருவெடுத்தே தீரும்.இதற்கு பதில் சொல்லாமல் ஆட்சியாளர் கள் தப்ப முடியாது.

;