headlines

img

பூனை கண்ணை மூடிக் கொண்டு...

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதியவேளாண் சட்டங்களால் விவசாயிகள் பயனடைவர் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும். வறுமையில் வாடும் விவசாயிகளின் நிலையை மாற்றி வளம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். அதற்கு என்ன மாற்றங்கள்கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என அறிஞர்குழுவை நியமித்து அவர்களுடைய பரிந்துரை அடிப்படையில் பிரதமர் முடிவெடுத்துள்ளார் என்று பில்டப் கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை இவர்களது அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. இப்போது புதிதாக ஒரு குழு கொடுத்ததாகக் கூறப்படும் பரிந்துரையின்படியே புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகின்றார்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கும் முறையை கைவிட்டுவிட்டு நேரடியாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சுதந்திரமாக இடைத் தரகரின்றி சந்தைகளில் விற்கலாம் என்று கூறிமத்திய அரசு கைவிரித்துவிட்ட கதை இந்தியவிவசாய பெருமக்கள் அறியாததல்ல. 

மத்திய அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிகழித்துவிட்டு, நேரடி கொள்முதல் முறையை ஒழித்துவிட்டு விவசாய விளை பொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவதாக கொடுத்ததேர்தல் வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பெரு முதலாளிகளிடமும் சிறு, குறுநடுத்தர விவசாயிகள் ‘சரிசமமாக’ பேரம் நடத்திதங்கள் விளைபொருளுக்கு கூடுதல் விலையைபெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்களாம். இதனை நாம் நம்ப வேண்டுமாம். 

இதனை நம்பாமல் தானே நாடு முழுவதும்உள்ள விவசாய பெருமக்கள் இந்த கொடியசட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தேபல்வேறு வடிவிலான போராட்டங்களில் ஈடுபட்டுசட்டங்களைதிரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், பொன்.ராதாகிருஷ்ணன்இவர்கள் கொண்டு வந்த சட்டங்களை அனைத்துவிவசாயிகளும் வரவேற்கின்றனர் என்று கூறுவது பூனை கண்ணை மூடிக் கொண்டு பூலோகமே இருண்டுவிட்டது என்று கூறுவது போல இருக்கிறது.

பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்பது நாடறிந்தஉண்மை. பொன்.ராதாகிருஷ்ணன் சாய்சப்சென்டர், இணையம் துறைமுகம், இராஜாக்கமங்கலம் மீன்பிடி துறைமுகம், ரப்பர் ஆராய்ச்சிக்கழகம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளையும்வழங்கி தான்  தேர்தலில் வெற்றி பெற்று மத்தியஅமைச்சரானார். ஆனாலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஒரு துரும்பை கூட அவர்கிள்ளிப் போடவில்லை என்பதை குமரி மாவட்டமக்கள் சொல்கிறார்கள். ஆனால் இவரோ இந்த
சட்டங்கள் விவசாயிகளுக்கு இருமடங்கு வருமானம் கிடைக்கும் என்கிறார். சொந்த ஊரில்விலை போகாத இவரது பேச்சு வேறெங்கேசெல்லுபடியாகும்.
 

;