headlines

img

சொத்துக்களை அபகரிக்கவே ஏர் இந்தியா விற்பனையா?

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக கடந்தாண்டு மே மாதம் பதவியேற்றது முதல் முந்தைய ஐந்தாண்டுகளை  விட அதிகளவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமான பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்கு களையும் தனியாருக்கு விற்கப்போவதாக அறி வித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு  அந்த நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

 ஏர் இந்தியா மட்டுமல்லாமல் அதனோடு தொடர்புள்ள கிழக்கு மற்றும் தெற்காசிய நாடு களுக்கு சிறப்பு சேவைகளை இயக்கிவரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையங்க ளில் பணியிடங்களைக் கொண்டுள்ள ஏர் இந்தியா சாட்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் விற்பதாக அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் என்பது, அதன் விமானங்கள், விமானத் தளங்கள், ஊழியர்களையும் உள்ளடக்கியதாகும்.   ஏர் இந்தியா நிறுவனத்தின் வசம் 121 விமா னங்கள் இருக்கின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 25 விமானங்களை வைத்திருக்கிறது. இவற்றில் அதிக அளவிலான விமானங்கள் பழையன. அவற்றின் தொழில்நுட்பம் பழையது.அவற்றைப் புதுப்பிக்க அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை. 

ஏர் இந்தியா, நீண்ட பாரம்பரியம் கொண்ட நிறுவனம். ‘மகாராஜா’ என்று அழைக்கப்படும் ஏர் இந்தியாவின் சின்னம் உலகப்புகழ் பெற்ற தாகும். மகாராஜா போல் கம்பீரமாக வானில் வலம் வந்த இந்த நிறுவனத்தின் நிர்வாக கோளாறு களைச் சரிசெய்ய மத்தியில் அடுத்தடுத்து ஆட்சி க்கு வந்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏர் இந்தியா கட்டணத்தை விடக் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் நிறுவ னங்கள் லாபத்தில் இயங்கும்போது இந்த நிறு வனம் நட்டத்தில் இயங்க என்ன காரணம்?

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் மட்டுமல்ல தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா என முக்கியமான நகரங்களின் மையப்பகுதி யில் அசையா சொத்துக்கள் உள்ளன. அவற்றை யும் சேர்த்து அபகரிக்க பல தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. இந்த அசையா சொத்துக்கள் பங்கு விற்பனையிலி ருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள போதிலும் அதை யும் தந்தால்தான் ஏர் இந்தியா பங்குகளை வாங்கிக் கொள்ளமுடியும் என்று தனியார் நிறுவனங்கள் நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது.   

 ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மொத்தமாக, 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. தற்போது இதை வாங்குபவருக்கு அது குறைக்கப்பட்டு, 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை மட்டும் செலுத்தி னால் போதும் என்று மத்திய அரசு கூறுவது ஏன்? ஏர் இந்தியா குழுமம் முழுவதும், ஏறத்தாழ 14 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். பொதுத்துறை நிறுவனம் தனியாருக்கு விற்கப் படும்போது இந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதைப்பற்றியெல்லாம் அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.