headlines

img

வாடிவாசல் இனி தடையின்றி திறக்கட்டும்!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கி யுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 

அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதி களும் ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல் என்ற பெயரிலான ஜல்லிக்கட்டு போட்டி சங்க காலத்திலிருந்தே நடந்து வந்துள்ள தற்கு ஏராளமான இலக்கிய சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருட்களும் இதற்கு சான்று பகிர்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தொன்மையான பண்பாட்டு விசயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்றும், ஜல்லிக் கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கி ணைந்த பகுதி என மாநில அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறோம், இதனை மாற்ற விரும்பவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் திமுக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 

ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடை யாது. இதில் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்க ளின் வீரம் வெளிப்படுகிறது. இந்த போட்டியில் எந்த விதிமீறலும் இல்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் பொங்கல் திருவிழாவின் போது இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது என தமிழக அரசு முன்வைத்த வாதத்தை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்கிறது.

இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு இதுவரை இருந்துவந்த தடை களை நீக்கியுள்ளது என்பது மட்டுமல்ல, 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய முறை யில் இளைய தலைமுறை நடத்திய போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் அமைந்துள்ளது.

சில மேலை நாடுகளில் நடைபெறுவது போல இந்தப் போட்டியில் விலங்குகள் கொல்லப்படு வது இல்லை. காளைகளுக்கும், வீரர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீரத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே ஜல்லிக்கட்டு அமைந்துள்ளது.

வேளாண் சமூகத்தில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான கூட்டு உழைப் பின் வெளிப்பாடாகவும், ஜல்லிக்கட்டு அமைந்துள் ளது. இனி வரும் காலங்களில் மாறியுள்ள சூழ லுக்கேற்ப ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. சாதிய ஆதிக்கம் போன்ற பாதகமான சில அம்சங்கள் தவிர்க்கப் பட்டு காளைகளுக்கும் வீரர்களுக்கும் உரிய பாது காப்பை உறுதி செய்து ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறட்டும்.