headlines

img

என்ஐஏ சட்டத் திருத்தம் ஒடுக்குமுறைக்கே பயன்படும்

மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) திருத்தச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி யுள்ளது.  இந்தமசோதாவை அறிமுகம் செய்தபோதே அதை எதிர்த்தும் அதனை தெரிவுக் குழுவிற்கு அனுப்பவேண்டும் என்றும் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.  இந்தியாவில் கடந்த காலங்களிலும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்ட ஒடுக்குமுறைச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டதுண்டு.ஆனால் பாஜக அரசு திட்டமிட்டு சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவும் அரசை கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்களை நக்சல் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்கவும் இந்த சட்டத்தை வலுப்படுத்துகிறதோ என்று அச்சம் எழுந்துள்ளது.

மத அடிப்படையில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களை குறி வைத்து இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதாக அரசு கூறிக் கொண்டாலும் கடந்த கால பாஜக அரசின் அனு பவத்தை நாடறியும். மாலேகான் குண்டு வெடித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனை வரும் தீவிர வலதுசாரி  இந்துத்துவா ஆதரவா ளர்கள்.  அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதா ரங்கள் இருந்தும் அனைவரும் விடுவிக்கப்பட்ட னர். இப்படி ஆளுக்கு ஏற்றார்போல் இந்தசட்டத் தை பயன்படுத்தும் நிலையும் உள்ளது.  மாநில அரசுகளிடம் இந்த சட்டம் குறித்து மத்திய அரசு எந்த கலந்தாலோசனையும் நடத்த வில்லை. புதிய சட்டத்திருத்தத்தின் படி மாநிலங்க ளிலுள்ள அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு நீதி மன்றங்களாக அறிவிக்கும் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அளிக்கிறது. தங்களது அரசியல் எதிரிகளை ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்துவதை பாஜகவினர் தொ டர்ச்சியாக செய்துவருகின்றனர்.  

பயங்கரவாத குற்றங்களை விசாரிப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இப்போது தனது அதிகார வரம்பை விரிவாக்குகிறது.  ஆள் கடத்தல், கள்ள நோட்டுகளை விநியோகித்தல் போன்ற வற்றை  பயங்கரவாத குற்றங்களாக்குகிறது.ஆயுதம் தயாரிப்பது, சட்டவிரோதமாக  விற்பது போன்றவை வெடிமருந்து சட்டத்தின் கீழான குற்றங்கள். இவற்றை தற்போதுவரை மாநில அரசுகள் விசாரித்து வருகின்றன. மாநில அரசுகளின்  விசாரணை வரம் புக்குள் இருப்பதை மத்திய அரசு தனக்குள்ள அதிகா ரத்தை பயன்படுத்தி தட்டிப்பறிக்கிறது.  இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் தற்போது மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம்- ஒழுங்கு படிப்படியாக மத்திய அரசின் கைகளுக்கு சென்று விடும். பின்னர் மாநில அரசு மத்திய அரசின் ஏஜெண்டாகத் தான் செயல்படமுடியும்.  மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலை யில் இருக்கும் அதிகாரங்களையும் மத்திய அரசு  பறிக்க முயல்வதை எப்படி அனுமதிக்கமுடியும்.

;