headlines

img

காஷ்மீரிகளின் பசி போக்கவா; கார்ப்பரேட்டுகளின் பசி போக்கவா?

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் பாஜககாரர்கள் பொய்யை துணிந்து சொல்வதும், அதை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல சாதிப்பதும் அவர்களின் வழக்கம். அதுதான் நாஜி ஹிட்லரின் கொள்கை பரப்புச் செயலாளரான கோயபல்சின் பாணி. அதையே நரேந்திர மோடியும் அவரது கையாளான அமித்ஷாவும் கையாள்கிறார்கள்.  காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்களன்று பேசும் போது, ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்க ளாக பிரித்ததற்கு காரணம் அந்த மாநிலத்தில் நிலவும் வறுமை, லஞ்சம், ஊழல் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் என்று கூறியுள்ளார். அதோடு வளர்ச்சியின்றி இருக்கும் அந்த மாநிலத்தை வளர்ச்சியடையச் செய்வதற்குத் தான் என்று கொஞ்சம் கூட கூச்சமின்றி பேசி யுள்ளார்.

இந்தியாவில் ஏதோ காஷ்மீரில் மட்டுமே வறுமையும், லஞ்ச ஊழலும் தாண்டவமாடுவது போல படம் காட்டியுள்ளார் அமித்ஷா. அவரது இந்த பேச்சை  சின்னக்குழந்தை கூட நம்பாது.  இந்தியாவில் வறுமையின் அகில இந்திய சராசரி 21.92 புள்ளிகள். இது 2013 செப்டம்பர் 16அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.  இந்த அறிவிப்பின்படி காஷ்மீர் மாநிலம் 10.35 என்ற அளவிலேயே உள்ளது. வளர்ச்சியின் நாயகன் என்று புகழப்பட்ட இன்றைய பிரதமர் நரேந்திர மோடி நீண்டகாலம் ஆட்சி செய்த, இப்பொழுதும் அவரது கட்சியே ஆட்சி செய்கிற குஜராத் மாநிலம் 16.63 புள்ளிகளைக் கொண்டு பின்தங்கியிருக்கிறது.  இந்த பின் தங்கிய நிலையிலேயே வளர்ச்சி வளர்ச்சி என்று கூப்பாடு போட்டு கார்ப்பரேட்டுகளால் கைதூக்கி விடப்பட்டார் மோடி.  இவர்களது கட்சியின் ஆட்சிகள் நடந்த, நடக்கிற மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் 29.43, மத்தியப் பிரதேசம் 31.65, அசாம் 31.98, சத்தீஸ்கர் 36.96, ஜார்க்கண்ட் 39.93, இவர்களது கட்சியும் பங்கேற்று கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் 33.76, பிஜூ ஜனதா தளம் தொடர்ந்து ஆட்சியிலி ருக்கும் ஒடிசா 32.59 புள்ளிகளை பெற்றுள்ளன. இவையெல்லாம் அகில இந்திய வறுமைக்கோடு சராசரிக்கு மேலே உள்ள மாநிலங்களாக இருக் கின்றன. இந்த மாநிலங்களையெல்லாம் வளர்ச்சி யடைய செய்வதற்கு யூனியன் பிரதேசங்களாக பிரித்திடுவாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா?

பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை க்கு காரணமாக கூறியது பயங்கரவாதிகளின் கைகளுக்கு கிடைக்கும் பணத்தை கிடைக்கவிடா மல் செய்வதற்குத்தான் என்று கூறியது நினைவு க்கு வருகிறது. காஷ்மீர் மக்களின் வறுமையை போக்குவதற்காக அல்ல இந்த நடவடிக்கை. மோடி - அமித்ஷா வகையறாக்களின் போஷ கர்களான கார்ப்பரேட் முதலாளிகளின் நிலப் பசியை போக்குவதற்காகவே!  

;