headlines

img

அதிமுக இழைத்துள்ள வரலாற்றுத் துரோகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்க மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் கூறுவது உண்மையென்றால், எந்த அடிப்படையில் இந்தச் சட்டத்தை நாடாளு மன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்தது என்பதை அவர் விளக்க வேண்டும். 

மோடி அரசு முரட்டுத்தனமாக நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது. தமிழகத்திலும் சென்னை, கோவை என போராட்ட நெருப்பு பரவி வருகிறது. மத்திய அர சின் அடிமை போலவே செயல்படும் மாநில அதிமுக அரசு காவல்துறை மூலம் இந்த போராட் டங்களை ஒடுக்க முயன்று தோற்றுவருகிறது. இந்தநிலையில், இந்தச் சட்டத்தை ஆத ரிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் நிறை வேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா வில் வாழும் குடிமக்கள் யாரையும் எந்த வகை யிலும் பாதிக்காது; சில எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டு இந்தப் போராட்டத்தை தூண்டி வரு கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் லட்சக்கணக்கா னோரின் குடியுரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதால்தான் இயல்பாகவே போராட் டம் வெடித்துள்ளது. அடுத்தபடியாக தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் நடைமுறைப் படுத்தப்படுமானால், கோடிக்கணக்கானோரின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்க ளாக மாற்றப்படுவார்கள். மோடி அரசின் இந்தத் திட்டம் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமல்ல, அதாவது இஸ்லாமியர்களை மட்டுமல்ல, இன அடிப்படை யில் தமிழர்களையும் பழிவாங்குவதாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் தஞ்ச மடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இந்தச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.

இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கை என்று எடப்பாடி பழனிசாமி நீட்டி முழக்குகிறார். மாநிலங்களவையில் அதிமுக இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்க ளித்திருக்கவில்லை என்றால் இந்தச் சட்டத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை அதிமுக மோடி அரசுக்கு நிபந்தனை யாக முன்வைத்ததா? 

மோடி அரசு கொண்டு வரும் அனைத்துச் சட்டங்களுக்கும் மறுபேச்சு பேசாமல் கைதூக்கி விட்டு இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடி யுரிமை தான் எங்கள் நிலை என்று பேசுவதில் ஏதாவது அர்த்தம் உண்டா? இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை அதிமுக இழைத்துள் ளது. இதை ஒருபோதும் தமிழகம் மன்னிக்காது. மோடி அரசின் பாணியில் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயல்வது விபரீ தத்தையே விளைவிக்கும்.

;