ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் நேர்ந்துள்ள பயங்கர ரயில் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 275 பேரின் உயிர்கள் பறிபோயுள்ளன. 900க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். சமீப பத்தாண்டு களில் நடந்துள்ள மிகப்பெரிய ரயில் விபத்து இது. விபத்தில் பலியானவர்களது துயரத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர். மிகக்கடுமையாக முகமும் உடலும் சிதைந்து கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
துயரம் தோய்ந்த கடந்த இரண்டு நாட்களில் எல்லோரது உள்ளமும் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையைப் பகிர்ந்து கொண்டது. அதையும் தாண்டி, இனியொரு கோர விபத்து நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், இந்த விபத்தின் பின்னணி யில் உள்ள அரசியல் இயல்பாகவே வெளிச்சத் திற்கு வருவது தவிர்க்க முடியாதது.
துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்று வழக்கம் போல ஆளும் பாஜகவினர் நாட்டு மக்க ளுக்கு அறிவுரை சொல்லத் துவங்கியிருக்கிறார் கள். ஆனால் அதேவேளையில் இந்திய ரயில்வே கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் படிப்படியாக சீர்குலைக்கப்பட்டு, தனி பட்ஜெட் முடக்கப்பட்டு, புதிய நவீன தொழில் நுட்ப ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு முற்றிலும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டது என்ற உண்மை யை பாஜகவினர் மறுக்கிறார்கள்.
ஒடிசாவில் நடந்த இந்த விபத்துக்கு சிக்னல் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக இருக்கக்கூடும் என்பது உள்பட பலவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்னல் தொழில் நுட்பம் துவங்கி, அனைத்தும் பழுதானாலும் கூட ரயில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என்பதை சென்சார் மூலம் தொலைவிலேயே உணர்ந்து ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து நேர வாய்ப்புள்ள இடத்திற்கு 400 மீட்டர் முன்பே ரயிலை நிறுத்தக்கூடிய நவீன கவசம் என்று அழைக்கப்படக்கூடிய ‘கவச்’ தொழில்நுட்பம் வரையிலும் மோடி அரசு காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை உரிய நிதி ஒதுக்கி செய்யவில்லை என்ற உண்மைகள் வெளிவந்துள்ளன.
அது மட்டுமல்ல, ரயில்வே துறையில் வேலைக்கு ஆள் எடுப்பதையே கிட்டத்தட்ட மோடி அரசு நிறுத்திவிட்டது என்று குறிப்பிட லாம். இந்திய ரயில்வேயின் முதுகெலும்பு போல விளங்கும் கடைநிலை ஊழியர்களான கேங்மேன் பணியிடங்கள் துவங்கி, ஸ்டேசன் மாஸ்டர் உள்பட உயர்நிலை அதிகாரி வரை சுமார் 14 லட்சம் பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன. இவர்களுடைய வேலையை தற்போது இருக்கும் ஊழியர்கள் கடுமையான பணிப்பளுவுடன் பார்த்து வருகிறார்கள். இந்தி யாவை குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் நரம்பு மண்டலம் போன்ற ரயில்வேயை முற்றி லும் அறுத்தெறிய முனையும் மோடி அரசுக்கு இந்த விபத்து ஒரு பெரும் எச்சரிக்கை.