headlines

img

தமிழகம் - கேரளா இடையே நம்பிக்கையூட்டும் தொடக்கம்

தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரி யாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, நெய்யாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் பிரச்சனைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் திருவனந்தபுரத்தில் சந்தித்துப்பேசி யிருப்பது நம்பிக்கையூட்டும் துவக்கமாகும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த பேச்சுக்கள் சுமுகமாக முடிந்துள்ளது. 

தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர்த்  தேவைக்காக முல்லைப்பெரியாறு, பரம்பிக் குளம்- ஆழியாறு என பல ஆறுகள் மற்றும் அணைகள் வாயிலாகக் கேரளா தண்ணீர் தந்து கொண்டிருக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது மகிழ்ச்சிய ளிக்கிறது. முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு, ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு, சிறுவாணி,  மணக்கடவு , பாண்டியாறு - புன்னம் புழா திட்டம், குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகா பயனடையும் வகையில் நெய்யாறு இடது கரைகால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரை வில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை ஏற் பட்டுள்ளது.

இப்பிரச்சனைகள் தொடர்பாக தீர்வுகாண  இருமாநிலங்களுக்கு இடையே 5 பேர் கொண்ட குழுவை அமைப்பது எனவும் இந்த குழுவின் செயல்பாடுகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து 6மாதங்களுக்கு ஒருமுறை இரு மாநிலத் தலைமைச் செயலர்கள் சந்தித்துப்பேசுவது எனவும் முடிவு செய்திருப்பது வரவேற்க வேண்டிய அம்சம் மட்டுமல்ல இத்தகைய நடவடிக்கை பிரச் சனைகளுக்கு விரைந்து தீர்வுகாண உதவும். 

கேரளாவும் தமிழகம் இடையே  எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணும் வகையில்தான் உள்ளது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பது இரு மாநிலங்களுக்கு இடையி லான நல்லுறவை மேலும் பலப்படுத்தும். இரு மாநிலம் தொடர்பான பிரச்சனைகளை  முக்கிய விவாதப் பொருளாக வைத்து தர்க்கம் மேற் கொள்ளாமல் அதற்குத் தீர்வு எட்டப்படும் என்று அவர் கூறியிருப்பதும் ஆரோக்கியமான போக்காகும்.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கான ஒப்பந்தம் செய்து 60 ஆண்டுகளாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை அங்கு மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு முடிவு எடுக் கப்பட்டுள்ளது.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேச்சு வார்த்தை மூலமாகத்  தீர்வுகாணவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. மோதல் போக்கை கடைப் பிடித்தால் இருமாநிலங்களின் நலனும் பாதிக்கப் படும். எனவே நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்- கேரளா ஆகிய மாநிலங்கள் இந்த முன்முயற்சி எதிர்காலத்தில்  நல்ல விளைவுகளைத் தரும்.

;