headlines

img

சோசலிசப் பெருமிதம்

கோவிட் 19 தொற்று பரவலின் வேகத்தை முற்றாக கட்டுப்படுத்தி கடந்த 50 நாட்களுக்கு மேலாக புதிதாக எவருக்கும் தொற்று இல்லை என்ற நிலையை எட்டி, இயல்பு நிலைக்கு திரும்பி யுள்ளது சோசலிச கியூபா. கடந்த ஜூன் 10 அன்றே, முந்தைய ஒரு மாத காலம் புதிதாக எந்த தொற்றும் இல்லை என்பது உறுதி செய் யப்பட்டு, கொரோனா பரவலின் முதல் கட்டத்தி லிருந்து முற்றாக நாடு விடுபடுகிறது என்று ஜனாதிபதி தியாஸ் கேனல் அறிவித்திருந்தார். அதன் பின்னரும் புதிய தொற்று எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் பல நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சத்தமில்லாமல், கியூபா தனது வலு வான மருத்துவ கட்டமைப்பின் உதவியோடும், கியூப உயிரி தொழிற்நுட்ப மற்றும் மருந்து துறை தொழிற்சாலைகளின் அர்ப்பணிப்புமிக்க பணி யின் காரணமாகவும் இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பரவல் மட்டுமல்ல, மரணங்களும் ஏதும் புதிதாக நிகழவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. மேலும் ஹவானாவில் உள்ள மருத்துவ மனைகள் மற்றும் நாட்டின் அனைத்து நகரங்களி லும், மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைக ளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

ஏற்கெனவே கொரோனா பாதிப்பு சீனாவில் வேகமாக பரவிய சமயத்தில் அதை கட்டுப்படுத் துவதிலும், மரண வேகத்தை மட்டுப்படுத்துவதிலும் கியூப மருந்துகள் மிக முக்கியப் பங்காற்றின. இந்த பின்னணியிலேயே இத்தாலிக்கும் இன்னபிற நாடுகளுக்க்கும் கியூப மருத்துவக்குழுக்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் முக்கி யத்துவம் வாய்ந்த பங்கினை ஆற்றி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பிரச்சனையில் கிடைத்துள்ள மருத்துவ அனுபவங்கள், உல களாவிய மருத்துவவிஞ்ஞானிகளின் ஆழ்ந்த  கருத்துக்கள் உள்பட அனைத்தையும் சீரிய முறை யில் உள்வாங்கிக் கொண்டு தனது சிகிச்சை நடைமுறைகளையும், மருந்துகளின் தன்மைகளையும் மேலும் செறிவுள்ளதாக மாற்றியிருக்கிறது கியூபா.

சமீபத்திய சில பத்தாண்டுகளில் கியூபா, தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய அனுபவங்களை ஈட்டியுள்ளது. கியூபா வின், ஒருங்கிணைந்த மருத்துவ கட்டமைப்பா னது தனது அர்ப்பணிப்புமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்துத் துறையை கொண்டு 14 வகையான தொற்று நோய்களை நாட்டிலிருந்தே ஒழித்துக் கட்டியுள்ளது; ஒன்பது வகையான தொற்று நோய்களின் வீரியத்தை கட்டுப்படுத்தி, அவை பரவும் வேகத்தையும் குறைத்து, அவற்றுக்கான சிகிச்சை முறை களை செறிவூட்டியுள்ளது.

இப்போது கொரோனாவை மட்டுப்படுத்து வது நடந்து கொண்டிருக்கிறது. இது மீண்டும் கியூபாவில் பரவாது என்று சொல்வதற்கில்லை; எனினும் பரவினால் அதை மீண்டும் உடனடி யாக தடுத்து கட்டுப்படுத்துவதற்கான திறனும், வீரியம் இழக்கச் செய்வதற்கான பலமும் கியூபா வுக்கு இருக்கிறது என ஜனாதிபதி தியாஸ் கேனல் பெருமிதம் கொள்கிறார். சோசலிசப் பெருமிதம் அது.

;