headlines

img

ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் நம்பி பயனில்லை

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து மாற்று யோசனை களை உலகப்புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள்  கூறிய பின்னரும் அதை மாநில அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.  

நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னை யில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனைத் தடுக்க மாவட்ட அளவில், மாநில அளவில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும், தற்போது சென்னையில் தடுப்பு பணியில் ஐஏஎஸ் அதி காரிகளின் தலையீடுதான் அதிகமாக உள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மாநில அரசுக்குப் பல யோச னைகளை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாக வும் சொன்னார்கள். களத்தில் நேரடியாக பணி யாற்றி அனுபவம் வாய்ந்த பல அதிகாரிகள் மாநகராட்சியிலும் மாநில சுகாதாரத்துறை யிலும் உள்ளனர். அவர்களைப் புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத இளம் ஐஏஎஸ் அதி காரிகளை மேலும் மேலும் நியமிப்பதால் எந்த பயனும் இல்லை.

மாவட்ட அளவில், பகுதி அளவில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கும் யோசனைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணிப்பதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால் நோய்த் தடுப்பு பணிகள் தோல்வியடைகின்றன. களப் பணியாளர்களுக்கும் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் சென் னையில் இதுவரை  சில லட்ச மாதிரிகளே பரிசோ திக்கப்பட்டுள்ளன. பரவலாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் தான் தொற்று உள்ள வர்களை விரைந்து கண்டறிந்து தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கமுடியும் என்று நிபுணர் கள் கூறுகிறார்கள். இதற்கு, தேர்ச்சி பெற்ற பணி யாளர்கள், டெங்கு காய்ச்சல் வந்தபோது பணி யாற்றிய அனுபவம் மிக்க அதிகாரிகள்,  சரியான திட்டமிடல், ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமி நாதனும் சொல்லியிருக்கிறார். ஆனால் எதை யும் தமிழக அரசு காதில் போட்டுக்கொண்டதா கத் தெரியவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டுமே நம்பியிருந்தால் மேலும் பல உயிர்க ளைப் பலி கொடுக்கவேண்டியிருக்கும்.  

களப்பணியாளர்களில் பலர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவதும் பலியாவதும் தொடர்கிறது. எனவே அவர்களுக்கான தடுப்பு உடைகளின் தரத்தில் எந்தவித சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக்கூடாது. கட்டுப்பாட்டு மண்டலங்களிலுள்ள மக்களுக்குத் தேவை யான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை  வசதிகளையும் அரசே செய்து கொடுத் தால்தான்  நோய்த்தொற்று பரவலை பெருமளவு தடுக்க முடியும். 

;