headlines

img

விடியலை எழுதும் எங்கள் வெளிச்ச வரிகள்

“தீக்கதிர் பரப்பப் போகும் கோடிச் சூரிய பிர காசத்திலே உழைக்கும் வர்க்கம் புது முறுக்கு  கொள்ளும். ஏட்டின் நெந்நாக்குகள் தெறித்து விழும். திசை எங்கும் அறிவுத் தீ தெறித்து விழும். திசை எங்கும் அறிவுத் தீ வான்முட்டக் கிளம்பும்.” 

1963ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி வெளியான தீக்கதிர் ஏட்டின் முதல் தலையங்கத் தில் இடம் பெற்றுள்ள வெளிச்ச வார்த்தைகள் இவை. இருளுக்கு எதிராக அறிவுத்தீயை ஏற்று வது என்ற லட்சிய இலக்குடன் தன்னுடைய பய ணத்தை 59 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய தீக்கதிர், இன்று வரை தடுமாறாமலும், தடம் புரளாமலும் இயங்கி வருகிறது என்பதில் பெரு மிதம் கொள்கிறது.

கால வெள்ளத்திற்கேற்ப தன்னை தகவமைத் துக் கொண்டு, தொழில்நுட்ப மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது தீக்கதிர். அரசியல் மாற்றங்களை பிரதிபலிக்கிற கண் ணாடியாக இருந்தபோதும், தொழிலாளி வர்க்க நலனில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்ட தில்லை. சமூகத்தை முன்னோக்கி நடத்த முயல் வோருக்கும், பின்னோக்கி இழுக்க முயல்வோருக் கும்  இடையிலான பெரும் போரில் இந்த ஏடு எப் போதும் முற்போக்காகவே முன் நகர்ந்துள்ளது. 

ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத் திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான இடை விடாத போராட்டத்தில் சோசலிசக் கருத்துக் களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியே தன்னுடைய லட்சியம் என்பதில் தீக்க திருக்கு ஒருபோதும் தடுமாற்றம் இருந்ததில்லை. சோவியத் யூனியன் தகர்க்கப்பட்டு சோசலி சத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், முடிந்தது கம்யூனிஸ்ட்டுகளின் கதை என எதிரிகள் எக்காளமிட்டபோது மார்க்சியமே மனித குலத்தின் எதிர்காலம் என கருக்கல் வெளிச்சமாய் கலங்கரை விளக்கமாய் கம்பீரமாக முழங்கியது தீக்கதிர். 

முதலாளித்துவத்தால் மனிதகுலத்தின் பிரச்ச னைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று மார்க்சியத்தின் வழியில் நின்று தீக்கதிர் அன்று முன்மொழிந்தது. அதையே வரலாற்று நிகழ்வுகள் வழிமொழிந்து கொண்டிருக்கின்றன. 

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது அழுக்குகளை யும், அவதூறுகளையும் அள்ளிவீசிய பொழு தெல்லாம் தீக்கதிர் ஏடு, பொய்களைப் பொசுக்கி உண் மையை ஓங்கி உரக்க உலகிற்குச் சொல்லும் பெரும் பணியை அயராமல் செய்து வந்துள்ளது. 

இது ஒன்றும் நடுநிலை என்று நடிக்கிற ஏடு அல்ல. ஓராயிரம் முறை ஓங்கிச் சொல்லுவோம் நாங்கள் எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமே நிற்போம். அதாவது உண்மையின் பக்கமே நிற் போம். நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடக்கும் போரில் நாங்கள் நீதியின் பக்கமே நிற்போம். மத வெறிக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையிலான போராட்டத்தில் நாங்கள் மதச்சார்பின்மையின் பக்கமே நிற்போம். சாதிவெறிக்கெதிராக நடக்கும் போரில் நாங்கள் சமூக நீதியின் பக்கமே நிற் போம். நிலவுடமை சார் ஆணாதிக்கத்தை வீழ்த்த நடக்கும் போரில் நாங்கள் பாலின சமத்துவத் திற்காகவே நிற்போம். ஒரு நாள் உலகம் விடியும். அதை நோக்கியே தீக்கதிர் எனும் வெளிச்சச் சுடரும் பற்றிப் படரும். 

;