headlines

img

மீண்டும் உள்ளே, வெளியே விளையாட்டு

வாரணாசி ஞானவாபி வளாகப் பிரச்சனை க்கு நீதிமன்றத்திற்கு வெளியில் சமரச தீர்வு காணலாம் என விஸ்வ வேதிக் சனாதன் சங் என்ற இந்துத்துவா அமைப்பு அழைப்பு விடுத் துள்ளது நயவஞ்சகமான ஒன்றாகும். அயோத்தி பாபர் மசூதி விசயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எத்தகைய அணுகுமுறையை கையாண்டு கடைசியில் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி னார்களோ அதேபோன்று தற்போது ஞானவாபி மசூதி விசயத்திலும் காய் நகர்த்தி வரு கின்றனர்.

நாங்கள் அயோத்தியோடு நிற்கப் போவ தில்லை. அடுத்தடுத்து காசி, மதுராவிலும் பிரச்ச னையை கிளப்புவோம் என ஆர்எஸ்எஸ் பரி வாரம் கூறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக் கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவு என்ற பெய ரில் கோவில் கட்டி வரும் நிலையில், அடுத்து காசியை கையிலெடுத்துள்ளனர். 

கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப் பட்டதாக நீதிமன்றத்தில் ஒருபோதும் நிரூபிக் கப்படவில்லை. அந்த இடத்தில் கோவில் கட்ட லாம் என அனுமதியளித்த உச்சநீதிமன்றம் கூட அங்கு கோவில் இருந்ததாக கூறவில்லை. கட்டப் பஞ்சாயத்து போலவே தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஞானவாபி வளாகத்தில் சிவலிங்கம் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக இந்துத்துவா அமைப்பி னர் கிளப்பி விட்டனர். அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் கோவில் உள்ளே இருப்பதாக தொடர்ந்து கூறி தொல் பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வு நடத்தக் கோரினர். மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பிறகு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால் தற்போது அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாங்கள் கூறுவதுபோல ஞான வாபி வளாகத்தில் கோவில் கட்டுமானம் இல்லை  என்று இந்துத்துவா அமைப்பினருக்கு நன்றாகத் தெரியும். நீதிமன்றத்திலேயே இந்துத்துவா அமைப்பின் சார்பில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் ஆலோசனை முன்வைக்கப்பட் டது. ஆனால் எதிர் வழக்காடும் இஸ்லாமிய அமைப்புகள் இதை ஏற்க மறுத்துவிட்டன.

இந்நிலையில் விஸ்வ வேதிக் சனாதன் சங் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. அயோத்தி பிரச்சனையில் கூட சமரசத் தீர்வு காண தயார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறினார். பின்னர் இஸ்லாமியர்கள் அந்த இடத்தை பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்று பஞ்சாயத்து செய்தார். அத்வானி ரதயாத்திரை நடத்திய தன் பின்னணியில் பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. அதே வேலையைத்தான் இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளனர். நீதித் துறை இப்போதாவது பாரபட்சமின்றி வழக்கை விசாரிக்க வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டும்.