headlines

img

பசுமாட்டுக் கோமியமும் உளறல் பேர்வழிகளும்

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா ஆட்கொல்லி நோயை கட்டுப் படுத்த பல்வேறு நாடுகள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன. அந்தநாடுகளில் உள்ள மக்கள் மருத்துவ சமூகத்தின் அளப்பறிய பணியை பாராட்டி வருகின்றனர். ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் பாஜக மற்றும் அதன் பரிவாரங்களின் செயல் பாடுகள் சர்வதேச அளவில்  பெருத்த அவப் பெயரை ஏற்படுத்தி வருகிறது.

“இது கொரோனா அல்ல, கர்மா ’’என்றும் விலங்குகளைக் கொன்று அதன் இறைச்சியை உணவாகக் கொண்டதன் விளைவுதான் நாட்டில் கொரோனா தொற்று  பரவியுள்ளது என்றும் புதுச் சேரி ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் உளறி கொட்டியுள்ளார். அசைவ உணவு உண்பவர்கள் கொரோனாவுக்கு பொறுப்பேற்பார்களா? என்றும் ஒரு பொறுப்பான பதவியில் உள்ள அவர் கேள்வி கேட்கிறார்.

அவரது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் களும் பல்வேறு மட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளும் இந்துத்துவா அமைப்புகளும் பசு மாட்டுக் கோமியத்தால் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தமுடியும் என்று புருடா விட்டு திரிகின்றனர். புதுதில்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாஜக தலைவர்களி டம் கேள்வியை கேட்டுவிட்டு “ கோமியம் உட லுக்கு எதிர்ப்பு சக்தி தரும் என்றால் தான் கொண்டு வந்துள்ள கோமியத்தை இப்போது குடிக்கலாமே’’ என்ற கூறி அதை எடுத்து கொடுத் தவுடன் அங்கிருந்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சியை சமூக வலை தளத்தில் கண்ட இளைஞர்கள் பாஜகவினரின் உண்மையான சொரூபத்தை கண்டு வறுத்தெ டுத்தனர். இதன் பின்னரும் சங்பரிவாரங்களும் பாஜக தலைவர்களும் திருந்தவில்லை. கோமி யம் சர்வலோக நிவாரணம் போல் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக நிர்வாகி ஒருவர் கோமியம் கொரோனா வைக் குணப்படுத்தும் என்று கூறி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் அவர் வழங்கிய கோமியத்தை ஒருவர் வாங்கி குடித்த ஒரு காவல ருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாட்டுக் கோமியம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகி நாராயண் சட்டர்ஜியை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா சட்டப்பேரவையில் பேசுகையில், பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என்று உளறியிருக்கிறார். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத இந்ததகவல்களை பாஜகவி னர் கூறும்போது மத்திய அமைச்சர்களோ அல்லது மாநில அமைச்சர்களோ மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல. இது மோசமான முன் உதார ணத்தை ஏற்படுத்திவிடும். இளைய தலைமுறை யிடம் தவறான தகவல்களை விதைக்கும் இது போன்ற பேச்சுக்களை வதந்தியாக கருதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும். 

;